India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 1 மணி வரை வேலூர் மாவட்டத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் ஒட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
நடப்பாண்டில் இந்தியாவிலேயே தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழங்கள் பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தின் உத்திர காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உத்திர காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று குடியாத்தம், காட்பாடி, அணைக்கட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 12) வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் தொடங்கி வைத்து பங்கேற்றார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, வேலூர் வட்டாட்சியர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பிடிஓக்கள் 3 பேர், துணை பிடிஓக்கள் 27 பேர் என 30 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஆகஸ்ட் 11) உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட பிடிஓ வின்சென்ட் ரமேஷ்பாபு, வேலூர் ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சிகள் பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 30 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் கன்டோன்மென்ட்- காட்பாடி இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடப்பதால் அரக்கோணத்தில் இருந்து காலை 7:20 மணிக்கு புறப்படும் வேலூர் கன்டோன்மென்ட் மெமு ரயில் இன்று 12ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் வேலூர் கன்டோன்மென்ட் – அரக்கோணம் மெமு ரயில் காட்பாடியில் இருந்து காலை 10.20 மணிக்கு அரக்கோணம் புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அரிமலை கிராமத்தில் ஜெயகுமார் என்பவரது மோட்டார் பைக் இன்று (ஆகஸ்ட் 11) திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து அவர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.