India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியாத்தம் நகர, தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காதர் பாஷா (19), குலாப் (50), குடியரசன் (24) ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 15) நடத்திய சோதனையில் 168 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 9 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பத்தலபல்லி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வேலூர் கோட்டை கொத்தளத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 15) தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் மேயர் சுஜாதா கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வேலூர் கோட்டை நுழைவு வாயில் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினமான இன்று வேலூரில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்தும் நாளை காலை 12.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் காவலர் பயிற்சி பள்ளி கூடுதல் எஸ்.பி.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டதில் வேலூர் போலீசாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல், வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புனிதாவுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 14) நடத்திய சோதனையில் 69 மதுபாட்டில்கள், மற்றும் 1.5 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், தொடர்புடைய 6 பேர் மீது ஒரே நாளில் மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 14) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.