India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. அதன்படி வேலுார் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு மொத்தம் 26 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையிடம் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை சமர்ப்பித்து பரிந்துரைக்கப்படவும் உள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பில் அரசு கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 20) திறந்து வைக்க உள்ளார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொள்கிறார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்ட முகாம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றின் மூலமாக சுகாதார பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது என கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 19) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 19) சோதனையில் ஈடுபட்டனர். இதில் 26 மதுபாட்டில்கள், தடை செய்யப்பட்ட 100 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நாளை (ஆகஸ்ட் 20) வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று முன்னேற்பாடு பணிகளை வேலூர் டிஐஜி தேவராணி, எஸ்பி மதிவாணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டத்தின் கீழ் மானியம் பெற அனைத்து வீட்டு மின் இணைப்பு நுகர்வோர்கள், வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்கள் கூடுதல் ஆவணங்களின்றி மின்கட்டண ரசீது மட்டும் பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.pmsuryaghar.gov.in, www.solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் கூறியுள்ளார்.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 2023-ம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,202 பேருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டிஐஜி தேவராணி, எஸ்பி. மதிவாணன் ஆகியோர் தலைமையில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு ஆகியவை நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. MRF நிறுவனம், தணிகைபோளூர், இச்சிபுத்தூர், உப்புப்பேட்டை, தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம், ஆற்காடு, மேல்பாடி, திருவலம், வள்ளிமலை, பூடுதாக்கு, கீழ்மின்னல், பிரம்மாபுரம், பெருமுகை, அரப்பாக்கம், காரணம்புட் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 18) நடத்திய சோதனையில் 104 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.