India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 25) மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூரில் வேளாண்மைத்துறையின் கீழ் தமிழக முதல்வர் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரபீ பருவத்தையொட்டி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வரை வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வேலூர் குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை அதிகாரிகளின் தகவல்களை வேலூர் மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. குடியாத்தம் நகர காவல் நிலையம், பேர்ணாம்பட்டு காவல் நிலையம், மேல்பட்டி காவல் நிலையம், கே. வி. குப்பம் காவல் நிலையம், பரதராமி காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண் 9442020547
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 31-ந் தேதி ஓட்டேரி முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 24) நடந்தது. இந்த கூட்டத்திற்கு இந்து முன்னணி நிர்வாகிகளை அழைக்கவில்லை எனக்கூறி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது இந்து முன்னணி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பாக 2024 பாராளுமன்ற பொது தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி சார்ந்த வேட்பாளர்களின் முகவர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு இன்று (ஆகஸ்ட் 24) தனது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் உடன் கலந்து கொண்டனர்.
காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கஞ்சா வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி காமேஷ் கைவிலங்குடன் தப்பி ஓடினார். இதையடுத்து தப்பி ஓடிய காமேஷை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை (ஆகஸ்ட் 24) கசம் அருகே மலையில் பதுங்கி இருந்த தப்பி ஓடிய விசாரணை கைதி காமேஷ் மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அணைக்கட்டு தாலுகாவில் விபத்தில் இறந்த 40 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்டிஓ பங்கேற்று நிவாரண தொகையை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.