India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசின் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (02.09.2024) பள்ளி, கல்லூரிகளில் பாலியல் பிரச்சினைகளை தடுப்பது குறித்து அனைத்து பள்ளி/ கல்வி நிறுவன முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, நேரலையில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, தலைமையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (16) இவர் வேலூர் தனியார் பள்ளியில் பிளஸ் -1 படித்து வருகிறார். இன்று (செப்டம்பர் 2) பள்ளிக்கு செல்ல வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் முன் படிக்கட்டில் தொங்கியவாறு சென்றார். அப்போது மாணவன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி இடது கால் துண்டானது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் இருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 18 கைதிகள் இன்று (செப்டம்பர் 2) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். பிற வழக்கு விசாரணைக்காக அங்குள்ள கோர்ட்டிற்கு அழைத்து செல்ல, பாதுகாப்பிற்காக போலீசார் உடன் செல்லுதல் உள்பட பல்வேறு காரணங்களால் கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யபட்டது. மேலும் சிலை வைப்பதற்கு அனுமதி பெறுவதற்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும்,மாவட்டம் முழுவதும் 1,008 விநாயகர் சிலைகள் வைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வு ஆகிய தேர்வுகள் வேலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வை மாவட்டம் முழுவதும் 459 பேர் எழுதினர். மேலும், தேர்வு நடைபெற்ற இடங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் தேர்வுக்கான பார்வையாளர் சமயமுரளி ஆகியோர் பார்வையிட்டனர்.
வேலூரை சார்ந்த சமூக ஆர்வலர் இன்று தினேஷ் சரவணன் 5 லட்சம் விதை பந்துகள் தயார் செய்து வேலூரை சுற்றியுள்ள மலைகளில் விதை பந்துகள் விதைத்து பசுமை நகரமாக மாற்ற முயற்சித்து வருகிறார். ஏற்கனவே இதுபோன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரின் பாராட்டுக்கள் பெற்றிருக்கிறார். அப்பகுதியை சார்ந்தவர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை கடந்த 3 ஆண்டுகளில் 1,336 விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவினத்தொகை ரூ.5.80 கோடி வேளாண்மை துறையின் மூலம் மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று கரையை கடந்தது. இந்த நிலையில்,வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.