India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(30). இவரது மாமனார் சம்பத். இருவரும் சேர்த்து உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்ற நிலையில், சுடுகாட்டில் இரவு 7 மணி அளவில் இருவரும் மது அருந்தியுள்ளனர். சம்பத் அங்கிருந்து சென்று விடவே சீனிவாசன் மறுநாள் காலை அருகில் இருந்த கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நவராத்திரியை முன்னிட்டு சென்னையில் செப்டம்பர் 21 ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான கண்காட்சியில் வேலூர் மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பங்கேற்க விரும்பினால் வரும் செப்டம்பர் 10 தேதிக்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை விழா முன்னிட்டு விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி, வேலூர் வட்டாட்சியர் முரளிதரன், உதவி பொறியாளர் அரசு, செயற்பொறியாளர்கள் செல்வராஜ், பார்வதி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (காண்டீபன்) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498109944
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், பாகாயம் சிஎம்சி மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நாளை நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என வேலுார் மாவட்ட தடகள சங்க தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் Mission Vatsalya வழிகாட்டி நெறிமுறைகளின்படி நிதியாதரவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதி ஆதரவுத்தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேலூரில் இன்று இரவு ஏழு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழையை பெய்ய வாய்ப்புள்ளதா என கமெண்ட் செய்யவும்.
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக வேலூர் சதுப்பேரி ஊசூர் ஏரி மற்றும் கருகம்புத்தூர் ஏரி, குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரி ஆகிய நீர்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலையை கரைக்க வேண்டும் எனவும், அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாம் எனவும் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.