India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்த தந்தை ஜீவாவை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது எருக்கன் செடியில் இருந்து பால் எடுத்தது குழந்தைக்கு ஊற்றி கொடுத்தது எப்படி என ஜீவா செய்து காட்டினார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் மாவட்ட பிரிவு 2024- 25 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மாவட்ட அளவிலான 5 பிரிவுகளின் கீழ் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு. அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினர்களுக்கும் 10.09.2024 முதல் 26.09.2024 வரை மாவட்ட விளையாட்டு அரங்கம் காட்பாடியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் பாகாயம் போலீசாரால் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 3 பேரை தேடி வந்தனர். இதில் பள்ளிகொண்டாவை சேர்ந்த அபிஷேக்(24), ரவிக்குமார்(25), விமல்(24) ஆகிய 3 பேரையும் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.அபிஷேக் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் கைதாகியுள்ளார்.
ஒடுக்கத்தூரில் நடந்த பெண் சிசுக்கொலை குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், இது போன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன. சமூக நலத்துறை மூலம் பெண்களை காப்போம், கற்பிப்போம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர்கள், சமூக நலத்துறையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை பெற்றோரே கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் எருக்கம் பால் ஊற்றி கொலை செய்ததாக தந்தை ஜீவா வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், ஆண் குழந்தை பிறந்தால் கிடாய் வெட்ட ஆடு ஒன்றை வளர்த்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெற்றோரே கொலை செய்து வீட்டின் அருகே புதைத்து விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பெற்றோர் ஜீவா, டயானா ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 6) அதிகாலை வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஜீவா, டயானா ஜீவாவின் தாயார் பேபி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
ஒடுக்கத்தூரை பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சேட்டு (30) டயானா (20) தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஓரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். சதேககம் அடைந்த டயானாவின் தந்தை போலீசில் புகைரளித்துள்ளார். மீண்டும் குழந்தையை தோண்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
டாக்டர்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான நேற்று அவர் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரை கௌரவிக்கும் வண்ணமாக ஆண்டுதோறும் மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் குடியாத்தம் சார்ந்த ஆசிரியர் கோபிநாத் அவர்கள் இந்திய ஜனாதிபதியிடம் நேற்று நல்லாசிரியர் விருது பெற்று வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான கல்லூரி படிப்புகளுக்கு சிறப்பு கல்வி கடன் வழங்கப்படவுள்ளது. இம்முகாம் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (செப்டம்பர் 6) நடைபெறவுள்ளது. எனவே இந்த முகாமை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை தெரிவிக்கவும்.
Sorry, no posts matched your criteria.