Vellore

News September 8, 2024

குடியாத்தம் அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

image

குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சிக்காக வந்த தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குடியாத்தம் அரசு மருத்துவர் பாபுவை நேற்று முன்தினம் திருச்சியில் உறவினர் வீட்டில் வைத்து குடியாத்தம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி மருத்துவர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News September 7, 2024

வேலூர் மாவட்டத்தில் 55 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 55 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

வேலூர் மத்திய சிறை டிஐஜி மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை டிஐஜியாக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் உள்பட 14 பேர் மீது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது மற்றும் நகை திருடியதாக கொடுமை செய்துள்ளனர். கைதி சிவகுமாரின் தாய் அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

News September 7, 2024

வேலூர் எஸ்.பி முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேற்று மாலை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் பாதையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மெயின்பஜார், கிருபானந்தவாரியார் சாலை, மாங்காய்மண்டி வரை ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி, விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் பாதையில் அன்றைய தினத்தில் எவ்வித கடைகளும் வைக்க கூடாது என்று வியாபாரிகளிடம் அறிவுறுத்தினார்.

News September 7, 2024

வேலூரில் யுபிஎஸ்சி தேர்வுக்கு‌ பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC – 2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சிக்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (செப்டம்பர் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News September 7, 2024

சலவைத்தொழில் தேய்ப்பு பெட்டிகள் பெற விண்ணப்பம்

image

வேலூர் மாவட்டத்தில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் உள்ள ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

வேலூர் விநாயகர் விஜர்சன ஊர்வலம் எஸ்பி ஆய்வு

image

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் வரும் (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தயார் நிலை குறித்தும், பாதுகாப்பு உபகரணங்களான HELMET, SHIELD, BODY PROTECTOR, GAS GUN LATHI, ROPE ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News September 7, 2024

வேலூர் கைவினைஞர் பயிற்சி குறித்து கலெக்டர் தகவல்

image

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (செப்டம்பர் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

வேலூர் மாவட்டத்தில் 37 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (செப்டம்பர் 6) நடத்திய சோதனையில் 37 மதுபாட்டில்கள் மற்றும் 300 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News September 6, 2024

வேலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 1072 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினார்கள், 70 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் 150 ஊர்காவல் படையினர் ஆகியோர் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.

error: Content is protected !!