Vellore

News September 15, 2024

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை

image

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (15.09.2024) ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையா, பூமா (குற்றவியல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

News September 15, 2024

அண்ணா சிலைக்கு இன்று மரியாதை செய்கிறார் ஆட்சியர்

image

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (செப்டம்பர் 15) காலை 10:15 மணியளவில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்ய உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2024

வேலூர் ஜெயிலர் உள்பட நான்கு பேருக்கு சிபிசிஐடி சம்மன்

image

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது மற்றும் நகை திருடியதாக தாக்கிய வழக்கில் தொடர்புடைய ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாவலர் ராஜூ உள்பட 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர். இவர்கள் நாளை (செப்டம்பர் 16) சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2024

வேலூரில் மிலாடி நபி முன்னிட்டு 17ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை

image

வேலூர் மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான கடைகள் ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவுகளில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 17ம் தேதி மிலாடி நபி என்பதால் மதுபான கடைகளை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

வேலூரில் இன்று நடந்த குரூப் 2 தேர்வில் 3,464 பேர் ஆப்சென்ட்

image

தமிழக முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 முதல் நிலைத் தேர்வு 2127 இடத்திற்கு. 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதினார், அதில். வேலூர் மாவட்டத்தில் இன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A ஆகிய தேர்வுகளில் பங்கேற்க 13,139 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அவர்களில் 9,675 பேர் இன்று தேர்வு எழுதினர், 3464 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 14, 2024

வேலூரில் TNPSC தேர்வுக்கு 3464 பேர் ஆப்சென்ட்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று (செப்டம்பர் 14) நடந்தது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 48 மையங்களில் குரூப்2, குரூப் 2ஏ தேர்வை 13139 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9675 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 3464 தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 14, 2024

வேலூர் மத்திய சிறையில் புதிய கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

வேலூர் சிறையில் புதிய கண்காணிப்பாளர் டிஐஜி முருகேசன் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலையில் ஈடுபடுத்தி ரூ. 4.25 லட்சம் திருடியதாக கூறி அவரை தனி அறையில் வைத்து தாக்கப்பட்டதாக கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உட்பட 14 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 14, 2024

வேலூரில் 20 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

image

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்து வரும் 20 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதைத்தவிர 7 ஊராட்சி ஒன்றிய உதவியாளர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சுப்புலெட்சுமி பிறப்பித்துள்ளார்.

News September 14, 2024

வேலூரில் இன்னும் சற்று நேரத்தில் TNPSC தேர்வுகள் தொடக்கம்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று (செப்டம்பர் 14) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 48 மையங்களில் இந்த தேர்வை 13,139 பேர் எழுத உள்ளனர் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 14, 2024

ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!