India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வாணியம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் பசுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளரும், வடக்கு மண்டல பொறுப்பாளருமான எஸ்.டி.இசை, தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட பலர் திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
வேலூர் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வந்து சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சுப்புலட்சுமி சரவணன் குண்டர் சட்டத்தில் சிறை காவலை நீட்டிக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை சற்றுமுன் வெளியானது. வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளார். மொத்தம் 9 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. இவர் இந்த தொகுதியில் 3ஆவது முறையாக போட்டியிடவுள்ளார்.
வேலூரில் அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்குகள் செல்வதாக எஸ்.பி மணிவண்ணனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் இன்று (மார்ச்.21) வேலூர் மக்கான் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக பைக் ஓட்டி வந்த 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் உரிமையாளருக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
வேலூர் மாவட்டம்,காட்பாடி காங்கேயநல்லூர் அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாள் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.இதில் 700க்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பசுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் போதை சாக்லேட் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (மார்ச் 20) அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த குஞ்சன் குமார் (21), மணீஷ் குமார் (21) இருவரும் போதை சாக்லெட் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் முருகன் என்பவருக்குப் பதிலாக மகேஷ் ஆனந்த் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், தேர்தல் பொறுப்பாளராக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மானை நியமித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராமன்(44), விவசாயி. இவர், இன்று மாலை 5 மணி அளவில் மின்மாற்றியில் ஏறும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு
சென்ற போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.