India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் அடங்கிய தனிப்படை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லை மற்றும் சுங்கச்சாவடிகளில் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் அக்.9ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும். வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மோட்டார் வாகனப்பிரிவு எஸ்.ஐ.யை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் தனி தாசில்தாராக பணியாற்றிய (நடுவர் தீர்ப்பாயம்) வடிவேலு, பேரணாம்பட்டு தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேரணாம்பட்டு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த கலைவாணி, பணியிட மாறுதலை ரத்து செய்து, அதே பணியிடத்தில் நியமனம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க இன்று மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 153 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார நிறைவு விழா வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன் ஹாலில் நாளை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து ஆகியோர் கொள்ள உள்ளனர். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் வருகிற (அக்டோபர் 2 ) காந்தி ஜெயந்தி முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் (பளுதூக்கும் போட்டி) கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியரின் விருப்பகொடை நிதியிலிருந்து ரூ.50,000/- க்கான காசோலையை குடியாத்தம் வட்டம் சீவூர் கிராமத்தை சேர்ந்த செல்வன் ஜெயமாருதிக்கு வழங்கினார்.
வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் உள்ள பழுதான கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூரில் கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சங்கமம் நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு கலைமன்ற விருதுடன் ரூ.3.30 லட்சம் பரிசுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு,கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் ஹேமநாதன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
பேரணாம்பட்டு அருகே புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி தவெக கட்சியின் கொடிக்கம்பம் அமைப்பதற்காக பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய தலைவர் சத்தியகுமார் உள்ளிட்ட குழுவினர் கொடி கம்பம் அமைப்பதற்கு சிமெண்ட்டினால் பீடம் அமைத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு விஏஓ மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கொடி கம்பத்தின் பீடத்தை இடித்து அகற்றினர்.
Sorry, no posts matched your criteria.