India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (காண்டீபன்) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498109944
வேலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவிப்பு எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் நிபந்தனையின்படி உரிய ஆவணங்களுடன் https://www.tnesevi.tn.gov.in என்ற இணையதளம் ஆன்லைன் வழியாக இ சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் 10.10.24 க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீனாக அறுவை சிகிச்சை துறையின் தலைவர் ராஜவேலு பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரோகிணி தேவியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று அவர் மருத்துவமனையின் டீனாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக 19வது பட்டமளிப்பு விழா வருகிற அக்டோபர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் துஷார் காந்தி பெஹரா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் டவுன் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர் அங்கு சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயகவுடா என்பது தெரியவந்தது. இது குறித்து இன்று வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயகாவுடாவை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (அக். 4) இரவு பலத்த மழை பெய்தது. இதில், குடியாத்தம் மோர்தனா பகுதியில் அதிகபட்சமாக 80.00 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 36.40 மி.மீ மழையும், ஒடுகத்தூர் 50.00 மி.மீ , வேலூர் 36.10 மி.மீ, கே.வி.குப்பம் 37.60 மி.மீ, சத்துவாச்சாரி 35.60மி,மீ, பேரணாம்பட்டு 8.6 மி.மீ, காட்பாடி 44.00 மி.மீ, மாவட்டம் முழுவதுமாக 377.90 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் நிபந்தனைகளின்படி உரிய ஆவணங்களுடன் https//www.aneney.to.0y.h என்ற இணையதளம் (online) வழியாக அல்லது “இ” சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் 19.10.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (அக்டோபர் 4) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 86 மதுபாட்டில்கள், 1130 ரூபாய் மதிப்புடைய குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 8 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் “தேசிய நல்லாசிரியர் விருது” பெற்ற வேலூர் மாவட்டம் இராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் இரா.கோபிநாத், தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி வேலூர் மாவட்டம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக ரோகிணி தேவியை நியமனம் செய்துள்ளது. தற்போது வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக (பொறுப்பு) ராஜவேலு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.