Vellore

News April 25, 2024

வேலூர் மாவட்டத்தில் நேற்றைய வெயில் அளவு

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.24)  அதிகபட்ச வெயிலாக  106.9°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News April 25, 2024

வேலூர் : மின்மாற்றியில் தீ விபத்து

image

வேலூர் சி.எம்.சி மருத்துமனை எதிரே மின்மாற்றியில் நேற்று ( ஏப்.24) மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து பொது மக்கள் மின்சார வாரியம், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வெயில் காரணமாக மின்மாற்றியில் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

News April 25, 2024

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆய்வு

image

வேலூர் மாநகராட்சி வார்டு எண் 21 சத்துவாச்சாரி பகுதி 3 பூங்கா நகர், அப்துல்கலாம் தெரு, அதியமான் தெரு ஆகிய தெருக்களில் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா. உடன் மாமன்ற உறுப்பினர் சக்கரவர்த்தி, சுகாதார அலுவலர் சிவகுமார் இருந்தனர்.

News April 25, 2024

ஏரிக்கு வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்ற எம்எல்ஏ

image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா, மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அக்ராவரம் ஏரிக்கு வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு. இதில் விவசாயிகள், ஊர் பொதுமக்கள், திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

News April 25, 2024

வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

வேலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

வேலூர் மாவட்ட‌ மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி இன்று (ஏப்ரல் 24) வேலூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் 8 பேர் மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 23)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 78 மதுபாட்டில்கள், 30 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 8 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News April 25, 2024

வள்ளி மலை கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம்

image

வேலூர் மாவட்டம், வள்ளி மலை ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் முருகப்பெருமான் பக்தர் துரைசிங்காரம் . உடன் வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் அசோகன் ஆகியோர் இருந்தனர்.

News April 24, 2024

வேலூரில் பக்தர்கள் தரிசனம்

image

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 24, 2024

அணைக்கட்டு: சந்தையில் ரூ.80 லட்சம் வர்த்தகம்

image

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை  மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) ஒரே நாளில் ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.