India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வேலூர் மாவட்டத்தில் மே 1ல் கிராமசபை கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்படும். ஆனால் தற்போதுவரை மே 1 கிராம சபை கூட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்காததால் கூட்டம் நடைபெறாது என தெரிகிறது.
வேலூர் மாநகர் பெரிய அல்லாபுரத்தில் திவ்யா கிளினிக்கில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு மருத்துவர் அனிதா, பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் இரத்த அழுத்தம், எலும்பு உறுதி தன்மை (BMD), உடல் பருமன் ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யபட்டன. இந்த முகாமில், சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 28) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 137 மதுபாட்டில்கள், 160 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 26 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மீன் மார்க்கெட்டில் இன்று (ஏப்ரல் 28) மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ 1600, சிறிய வஞ்சரம் மீன் ரூ 800, இறால் ரூ 450 முதல் 600, கட்லா ரூ 160, நண்டு ரூ 400 முதல் 450, மத்தி ரூ 140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 28) அதிகபட்சமாக 106.0°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் , ஏரியூர் பகுதியில் கோடை வெயிலை சமாளிக்க மற்றும் பொதுமக்களின் தாகம் தீர்க்க சுமார் 500 பேருக்கு சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் சார்பாக இன்று மதியம் மோர் வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பிரதம மந்திரியின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று போலியான லிங்குடன் குறுஞ்செய்திகள் உலா வருகின்றன. இதை நம்பி லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் மேலும் சைபர் கிரைம் சம்பந்தமான புகார்களை www.cybercrime.gov. in என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
காட்பாடியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மனைவி அனிதா(36). அனிதா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் பைக்கில் தாராபடவேடு அருகே வந்தபோது இவர்கள் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். காட்பாடி போலீசார் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அனிதா வயிற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்
வேலூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏப்ரல் 29-ம் தேதி முதல் தொடர்ந்து 30 நாட்களுக்கு நடைபெறவுள்ள ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்களில் ஆடு வளர்ப்போர் தங்கள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தவறாமல் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காட்பாடி, காங்கேயநல்லூர் பாலாற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கங்கையம்மன் மிகவும் கருணை நிறைந்த தெய்வமாகும் . இந்த திருத்தலத்தில் 48 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கங்கையம்மன் இரண்டாம் நாள் உற்சவம் மிக சிறப்பாக நேற்று இரவு நடைபெற்றது.இதில் கங்கையம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார்.
Sorry, no posts matched your criteria.