Vellore

News November 18, 2024

நவ.30ல் வேலைவாய்ப்பு முகாம் : கலெக்டர்

image

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நவ.30ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்த முகாம் குடியாத்தம் திருவள்ளுவர் அரசு நிதியுதவி மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலும், 0416-2290042, 9499055896 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

 குறைதீர் கூட்டத்தில் 478 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (நவ.18) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 478 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News November 18, 2024

வேலூர் மாவட்டத்தில் 11,574 பேர் விண்ணப்பம்

image

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் 16ஆம் தேதி 4,331 பேர் விண்ணப்பம் அளித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த முகாமில் பெயர் சேர்க்க 4,791 பேரும், நீக்கம் செய்ய 273 பேரும், திருத்தம் செய்ய 2,179 பேரும் என்று மொத்தம் 7,243 பேர் விண்ணப்பங்கள் அளித்தனர். 2 நாட்கள் நடந்த முகாமில் 11,574 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.

News November 17, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (நவம்பர் 17.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News November 17, 2024

வேலூர் அருகே நூதன முறையில் திருட்டு

image

காட்பாடி அருகே விருதம்பட்டு சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி. இவர் மனைவி மீனாட்சி. இவர்கள் வீட்டின் காலிங்பெல் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தொடர்ந்து அடித்து கொண்டிருந்துள்ளது. இதையடுத்து மீனாட்சி கதவை திறந்தபோது வெளியே பதுங்கி இருந்த ஆசாமி திடீரென அவர் கழுத்தில் இருந்த 6 சவரன் தாலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 17, 2024

பேருந்தின் சக்கரம் ஏறி பெண் பலி

image

வேலூர் அருகே கொசப்பேட்டை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி தேவி (40). இவர்கள் 2 பேரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பேருந்து சக்கரம் தேவியின் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். சிவக்குமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 17, 2024

வேலூர் கூட்டுறவு துறை அதிகாரிகள் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளன. இதன் நேர்முகத் தேர்வு வருகிற 28-ம் தேதி முதல் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட் www.drbvellore.net என்ற இணையதளத்தில் நாளை (நவம்பர் 18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 17, 2024

வேலூர் மாவட்டத்தில் 4,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டன

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 669 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று( நவ 16) நடந்தது. இதில் பெயர் சேர்க்க 2,967 விண்ணப்பங்களும், நீக்கம் செய்ய 122 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக 1,242 விண்ணப்பங்களும் என மாவட்டம் முழுவதும் 4,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 16, 2024

வேலூர் எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 16) நடத்திய சோதனையில் 66 மது பாட்டில்கள், 200 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News November 16, 2024

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. இப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!