India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே மேம்பாலத்தில் இன்று காலை பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
குடியாத்தம், நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இதனை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் வேலூர் நகரில் போக்குவரத்து போலீசார் நேற்று(நவ 23) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய 103 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ. 1,05,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று (நவம்பர் 23) நடந்தது. இதில் பெயர் சேர்க்க 2449 விண்ணப்பங்களும், நீக்கம் செய்ய 396 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக 1463 விண்ணப்பங்களும் என மாவட்டம் முழுவதும் 4,308 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் காரணம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் சந்தியா மற்றும் பாக்கியலட்சுமி தமிழக ஹாக்கி அணியில் தேர்வாகி தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற இருக்கிறார்கள். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலர் பாராட்டி வருகின்றனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 9 வருடங்களாக அகவிலைப்படி வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து சென்னையில் டிச., 17ல் அரை நிர்வாண போராட்டம் நடத்தவுள்ளனர். இதற்கான ஆயத்த கூட்டம் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் மீட்பு சங்கம் வேலூர் மண்டலம் சார்பில் டவுன் ஹாலில் இன்று நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கணியம்பாடி வல்லம் ஊராட்சியில் இன்று (நவம்பர் 23) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இதில் கணியம்பாடி ஒன்றிய குழுத்தலைவர் திவ்யா கமல் பிரசாத், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா, ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.