India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூரில் இன்று (ஆகஸ்ட்.14) வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.<
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆக-13) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)
வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தினை ஒட்டி அனைத்து மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 4 லட்சத்தி 57 ஆயிரத்து 48 ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வருகின்றனர். இதில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பம் இல்லையெனில், தங்கள் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஆக.13 ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளில் தவறாமல் கிராம சபையை கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
வேலூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலி பணியிடங்கள் உள்ளன. அதில் வேலூரில் மட்டும் 79 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <
சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை வேலூரில் 4,725 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.
வேலூரில் இன்று (ஆகஸ்ட் 13) வேலூர், ஒடுக்கத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த <
Sorry, no posts matched your criteria.