India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை (ஜன.15) முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. மாலை சுவாமி அலை வாய் குகந்தபெருமாள் வெள்ளி குதிரை வாகனத்தில் வேட்டை மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு கணு வேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில் உயிரெனக் கருதும் தமிழையும், உணர்வோடு ஒன்றான தமிழ் மண்ணையும், உணவளிக்கும் உழவையும் கொண்டாடும் அறுவடைத் திருநாளில், அனைத்து மக்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துகள் என்று பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் (வண்டி எண் 06168) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து ஜனவரி 19 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் (திங்கட்கிழமை) காலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் நேற்று (ஜன.13) செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்; மாவட்டத்தில் அரிவாள் கத்தியுடன் நிற்பது போன்று ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் இவ்வாறு ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவில்பட்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டம் திமுக அரசு கடிதம் கொடுத்த காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது; இதனை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளாரிடம் ஒப்புதல் பெற்று அதிமுக சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக” அவர் தெரிவித்தார்.
துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. நடப்பு நிதியாண்டு டிச. வரை, 3,73,393 டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது. இதில் 2,97,132 டன் பாமாயில் மற்றும் 76,261 டன் சூரியகாந்தி எண்ணெய் அடங்கும். முந்தைய நிதியாண்டு டிச. வரை, 3,9,229 டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. தற்போது, 20.75% அதிகம் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் கூலிங் சீட் என்ற பெயரில் கண்டெய்னர் பெட்டியில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டைனர் பெட்டியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது அதில் ரூபாய் 1.25 கோடி மதிப்புள்ள 6.200 மெட்ரிக் டன் கொட்டைப்பாக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வில்லியம் பிரேம்குமார் , அய்யனார் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியின் ஆற்றல்மிக்க தலைவராகிய பிரியங்கா காந்தி வத்ராவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்; ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், பின்தங்கியவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் உங்களின் இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை” என குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறியதாக மத்தியமைச்சர் தெரிவித்துள்ளார். வழக்கம்போல் மத்திய அரசு பொய்யான தகவலை தெரிவித்து வருகிறது. இது முற்றிலும் தவறு. இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜன.14,15 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்காணித்து மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், மோட்டார் பம்புகள் முதலியவற்றை தயார் நிலையில் வைத்திடவும், நிவாரண முகாம்களை தயார் செய்திடவும் மாவட்ட அலுவலகம் மூலம் அறிவுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.