Tuticorin

News November 6, 2024

கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 8ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது, இதில் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

இன்றும் நாளையும் கனரக வாகனங்களுக்கு தடை

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை (நவ.7) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் சரக்கு கனரக வாகன போக்குவரத்திற்கு இன்றும் நாளையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் மற்றும் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News November 6, 2024

தூத்துக்குடி ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு 2024-2025 ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பிட்டு குழு தலைவர் காந்தி ராஜன் தலைமையில் (நவ 05) நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு நடைபெற்று வரும்பணிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

News November 5, 2024

தூத்துக்குடி: இரட்டை கொலை வழக்கில் 2 ஆயுள் தண்டனை

image

மூனாரை சேர்ந்த கணவன் மனைவி மேரி, தேவ சிங் இவர்கள் குலசேகரப்பட்டினத்தில் பேப்பர் சேகரிக்கும் தொழில் செய்து வந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு பிள்ளையான் பெரியவன் தட்டை சேர்ந்த செல்வம் என்பவர் மேரியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற போது தகராறு ஏற்படவே செல்வம் மேரியையும் தேவசிங்கையும் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் செல்வத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News November 5, 2024

தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது

image

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் நேற்று வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகே ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த அண்ணாநகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகேஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 5, 2024

சூரசம்ஹாரத்திற்கு செல்ல வரைபடம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 2 யாகசாலை பூஜையுடன் துவங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. நவ.7 ல் சூரசம்ஹாரம் கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. அதற்காக எந்தெந்த ஊர்களில் இருந்து எந்த வழியாக கோவிலுக்கு வர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வரைபடம் வெளியிட்டுள்ளார்.

News November 5, 2024

தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

image

இணையதளங்களில் பகுதி நேர வேலை, ஆன்லைன் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளங்கள், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் பணத்தை இழந்துவிடக் கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 5, 2024

தூத்துக்குடி ஹாக்கி வீராங்கனைகள் தேர்வு

image

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நெல்லையில் வைத்து இம்மாதம் 9 முதல் 12 தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட அணிக்கு வீராங்கனைகள் தேர்வு கோவில்பட்டி காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வைத்து நவ.9ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

தூத்துக்குடி மாவட்ட சீர்மரபினருக்கு அறிவிப்பு

image

தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு LPG மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.