India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பாக்கியநாதன் விளையை சேர்ந்தவர் மாரிமுத்து. கடந்த 2018 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக இவரை இவரது மருமகன் நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த காளிராஜ் என்பவர் கொலை செய்தார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று(ஜன.21) காளிராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் வருவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுதும் ரஷ்யா ஆஸ்திரேலியா கஜகஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அரிவாள் மூக்கன், உப்பு கொத்தி உள்ளான், செங்கால் நாரை போன்ற பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் மாதம் தோறும் பொதுமக்கள் நலன் கருதி குடும்ப அட்டைகள் திருத்த முகாம் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் வரும் 25 ஆம் தேதி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகவரி மாற்ற புதிய குடும்ப அட்டை போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் வெளியிட்ட செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம்,கலியாவூர்,கீழ் வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு பகுதியில் இன்று மின் பராமரிப்பு பணிகள் இருப்பதால், தூத்துக்குடி மாநகரில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக சரவண கிருஷ்ணன் இன்று(ஜன-20) கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் பிஜேபி மாவட்ட கட்சி அலுவலகத்தில் பதவி ஏற்று கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், பொதுச்செயலாளர் வேல்ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் போத்தீஸ் ராமமூர்த்தி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். *உங்களுக்கு தெரிந்த விவசாயிகள்,விவசாய சங்கங்களுக்கு பகிரவும்*
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 54ஆவது பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று(ஜன.20) தொடங்கியது. சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பார்வையிட்டு தொடங்கி வைத்தார். உடன் கல்லூரி செயலாளர் சோமு மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று(19ஆம் தேதி) பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 11.60 மில்லி மீட்டரும், கழுகுமலையில் 28 மில்லி மீட்டரும், சூரங்குடியில் 42 மில்லி மீட்டரும், வைப்பாரில் 21 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 199.60 மில்லி மீட்டர் மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சல சுவாமி திருக்கோவிலில் அமாவாசை திருவிழா இன்று(ஜன.20) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் 9-ம் நாள் சிகர நாள் நிகழ்ச்சியாக காலை சேர்ம விநாயகர் உலா மற்றும் பல்வேறு கோலங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.