Tuticorin

News February 19, 2025

தூத்துக்குடி நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு

image

விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் வேப்பலோடை பகுதியை சேர்ந்த மணி (59) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் குற்றவாளிக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

News February 19, 2025

முதல்வரை ‘அப்பா’ என அழைக்க மாட்டார்கள்: கடம்பூர் ராஜூ

image

கோவில்பட்டியில் நேற்று(பிப்.18) அதிமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்பது இயற்கையாக அமைந்துவிட்டது. ஆனால் தமிழக முதல்வர் அவரது தந்தையை வேண்டுமென்றால் அப்பா என்று அழைத்துக் கொள்ளலாம் அவரை யாரும் அப்பா என்று அழைக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

News February 19, 2025

தூத்துக்குடி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் பகுதியாக ரத்து!

image

தூத்துக்குடி – பாலக்காடு மற்றும் பாலக்காடு – தூத்துக்குடி செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பராமரிப்பு பணி காரணமாக இன்று(பிப்.19) மற்றும் 28ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியிலிருந்து – கொல்லம் வரை பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கொல்லத்தில் இருந்து மட்டும் பாலக்காட்டிற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News February 19, 2025

தூத்துக்குடி: காவல்துறை வாரிசுகளுக்கு உதவித்தொகை

image

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகள் 10,12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 10 இடத்தை பெற்றவர்களுக்கு காவல்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கோரம்பள்ளம் எஸ்பி அலுவலகத்தில், காவல்துறை வாரிசுகளுக்கான கல்வி உதவித் தொகையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வழங்கினார்.

News February 19, 2025

தூத்துக்குடி: இரவிலும் தொடர்ந்த மாணவர்களின் போராட்டம்

image

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர் சங்கத் தலைவர் நேசமணி நிரந்தர நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கல்லூரி வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று(பிப்.18) காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. மாணவர்கள் அங்கேயே உறங்கிய வண்ணம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 19, 2025

மீனவர்களுடன் முதல்வரை சந்தித்த தூத்துக்குடி எம்பி

image

தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து இலங்கை ராணுவம் அத்துமீறலை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு இதில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வலியுறுத்துவதற்காகவும், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தமிழக முதலமைச்சரை சென்னையில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

News February 18, 2025

தூத்துக்குடி இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு மத்திய அரசின் பயிற்சியடன் கூடிய வேலைவாய்ப்பு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மூலம் முள்ளக்காடு கிரேஸ் கல்லூரியில் வைத்து அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தின் மூலம் வருகின்ற (24.02.25) முதல் தொடங்க இருக்கிறது. வேலை தேடும் இளம் தலைமுறையினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.(தகவலுக்கு-7548850197, 7305530388) *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News February 18, 2025

தூத்துக்குடி கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் அனைத்து முன்னுரிமை பெற்ற மற்றும்  அன்னயோஜனா அந்தியோதயா திட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் 5 வயதுக்கு மேற்பட் குடும்ப உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகைகளை நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்திட’ தெரிவிக்கப்பட்டுள்ளது.*பக்கத்து விட்டாருக்கு பகிரவும்

News February 18, 2025

தூத்துக்குடி காவல்துறை சார்பில் குறைத்தீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற உள்ள குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள எஸ்பி அலுவலகம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது.

News February 18, 2025

மகாசிவராத்திரியை முன்னிட்டு கங்கை நதி நீர் விற்பனை

image

அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சிவராத்திரியை முன்னிட்டு நாடுமுழுவதும் கங்கை நதி நீரை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது; இப்புனித நீரை எளிதில் பெறும் வகையில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவை தலைமை தபால் நிலையங்களில் கங்கை நதி நீர் சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.* நண்பர்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!