India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 7 வயது சிறுமியிடம் கடந்த 2020ஆம் ஆண்டு கோவில்பட்டி பாரதி நகர் ஆரோக்கியசாமி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆரோக்கியசாமி மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில், வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 23வது தேசிய தடகள விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி முத்து மீனா குண்டு எறிதலில் தேசிய அளவில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதை தொடர்ந்து முத்து மீனாவுக்கு தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஒரு வாழ்த்து சொல்லலாமே!
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூலில், தூத்துக்குடியின் இளம் தொழில்முனைவோரின் ஆற்றலும் உற்சாகமும் நம்பமுடியாதவை. உங்களில் பலர் பதிவு செய்ய ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்கும் என நம்பி வந்து சேர்ந்தீர்கள். அது இதோ! யாரும் தவறவிடக்கூடாது என்பதற்காக, பதிவு செய்யும் காலக்கெடுவை பிப்.25 வரை நீட்டிக்கிறோம். நீங்கள் காத்திருந்தால், இப்போது பதிவு குறியீட்டை ஸ்கேன் செய்யவும் என குறிப்பிட்டுள்ளார்.
விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் வேப்பலோடை பகுதியை சேர்ந்த மணி (59) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் குற்றவாளிக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
கோவில்பட்டியில் நேற்று(பிப்.18) அதிமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்பது இயற்கையாக அமைந்துவிட்டது. ஆனால் தமிழக முதல்வர் அவரது தந்தையை வேண்டுமென்றால் அப்பா என்று அழைத்துக் கொள்ளலாம் அவரை யாரும் அப்பா என்று அழைக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி – பாலக்காடு மற்றும் பாலக்காடு – தூத்துக்குடி செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பராமரிப்பு பணி காரணமாக இன்று(பிப்.19) மற்றும் 28ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியிலிருந்து – கொல்லம் வரை பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கொல்லத்தில் இருந்து மட்டும் பாலக்காட்டிற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகள் 10,12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 10 இடத்தை பெற்றவர்களுக்கு காவல்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கோரம்பள்ளம் எஸ்பி அலுவலகத்தில், காவல்துறை வாரிசுகளுக்கான கல்வி உதவித் தொகையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வழங்கினார்.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர் சங்கத் தலைவர் நேசமணி நிரந்தர நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கல்லூரி வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று(பிப்.18) காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. மாணவர்கள் அங்கேயே உறங்கிய வண்ணம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து இலங்கை ராணுவம் அத்துமீறலை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு இதில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வலியுறுத்துவதற்காகவும், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தமிழக முதலமைச்சரை சென்னையில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு மத்திய அரசின் பயிற்சியடன் கூடிய வேலைவாய்ப்பு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மூலம் முள்ளக்காடு கிரேஸ் கல்லூரியில் வைத்து அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தின் மூலம் வருகின்ற (24.02.25) முதல் தொடங்க இருக்கிறது. வேலை தேடும் இளம் தலைமுறையினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.(தகவலுக்கு-7548850197, 7305530388) *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
Sorry, no posts matched your criteria.