India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று(பிப்.20) திடீர் ஆய்வில் இறங்கி, 200 இரு சக்கர வாகனங்களை சோதனையிட்டு ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து பல்வேறு வாகனங்களை சோதனை செய்தார். தூத்துக்குடி போக்குவரத்துக் காவல்துறை சார்பாக போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் ஆகியோர் தலைமையில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (பிப்.20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டக் காவல் துறையின் மூலம் அதிகாரப் பூர்வமாக X தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
“தூத்துக்குடி மாவட்ட நியாய கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்” என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தகவல் தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சில பகுதியில் வெயில் அதிகமாகவும் சில பகுதியில் குறைவாகவும் இருந்தது. கோவில்பட்டியில் அதிகபட்சமாக 96 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்செந்தூரில் 85 டிகிரியும் தூத்துக்குடியில் 87 டிகிரி வெப்பம் பதிவானது. உங்கள் பகுதியில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கு மக்களே?
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் இன்று வரை மூடப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டமும் மற்ற நிகழ்வுகளோ நடைபெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை மீறி ஆலை ஆதரவாளர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு, தூத்துக்குடி மாவட்ட ஹெச்எம்எஸ் உழைப்பாளர்கள் சங்கம், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நல சங்கம் சார்பில் சுயம்வரம் நிகழ்ச்சி மார்ச் 9ஆம் தேதி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பங்கேற்கலாம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கண்ணன் சிவராம் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை சைபர் கிரைம் குற்றங்களில் ரூ.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இந்த குற்றங்கள் காவல்துறையால் தொழில்நுட்ப ரீதியில் புலனாய்வு செய்யப்பட்டது.அதன்படி, மோசடி செய்யப்பட்ட ரூ.27 லட்சம் நீதிமன்றம் மூலம் மீட்கப்பட்டு நேற்று கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வழங்கினார்.
அய்யா வைகுண்டரின் 193வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று(பிப்.20) உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் அந்த மாதத்தில் 2வது சனிக்கிழமை(மார்ச் 8) வேலை நாளாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். SHARE IT.
திருச்செந்தூர் அருள் மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிக்கான விவரங்கள் தரப்பட்டுள்ளது.#03.03.2025 – கொடியேற்றம்#07.03. 2025 – 5ஆம் திருநாள் குடவாசல் தீபாராதனை#09.03.2025 – 7ஆம் திருநாள் சிவப்பு சாத்தி#10.03.2025 -8ஆம் திருநாள் பச்சை சாத்தி#12.03.2025 -10ஆம் திருநாள் தேரோட்டம்#13.03.2025 -11ஆம் திருநாள் தெப்பம்.
வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0’ என்ற திட்டத்தின் கீழ் குறைதீர்க்கும் கூட்டத்தை மாதம்தோறும் மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான வருங்கால வைப்பு நிதி குறைதீர் நாள் கூட்டம் பிப்.27ஆம் தேதி கோவில்பட்டி தென்னிந்திய தீப்பற்றி உற்பத்தியாளர் சங்க கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.