India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குழந்தைகள் நல குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினராக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. உளவியல், குழந்தைகள் நலம் போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள், 35-65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான <
திருச்செந்தூர் அருகே மேலபுதுக்குடியில் உள்ளது அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில். தேரிக்காட்டிற்கு நடுவே சுற்றி மரங்களும் செம்மண்ணும் சூழ அமைந்துள்ளது. இங்கிருக்கும சுனையில் குளித்தால் தீராத பிணி நீங்கும் என்பது ஐதீகம். ஆன்மீக தலமாக மட்டுமின்றி சுற்றுலா தலமாகவும் விளங்கும் இங்கே பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த கோடையை குடும்பத்துடன் இங்கே கொண்டாடுங்க! நண்பர்களுக்கு பகிரவும்
உலகளாவிய தாய்மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி எம்.பி கனிமொழி தனது ‘X’ தள பக்கத்தில் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே” என்று துவங்கி, “ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னைத் தமிழைக் காக்க உறுதியேற்போம்” என்று இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் காரசாரமாக பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 26ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று மாலை மங்கல இசை, தேவார இசை மற்றும் பள்ளி மாணவர்களின் திருமுறை இன்னிசை நடைபெறுவதுடன் 216 சிவலிங்க பூஜையும் நடைபெற உள்ளது. இரவு 50க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் இயந்திர தயாரிப்புப் பணி காஸ்மிக்போா்ட் என்ற ஸ்டாா்ட் அப் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மெத்தலாக்ஸ் எரிபொருளால் இயங்கும் இயந்திரங்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம், குறைந்த செலவில் ராக்கெட் ஏவுவதற்கும், மீள் பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியும் என தலைமை அதிகாரி நவீன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் டிஏபி உரம் இல்லை என கூறுவதாக, விவசாய சங்க நிர்வாகி ஜெயராஜ் இஸ்ரவேல் தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத்திடம் புகார் தெரிவித்தார். உடனடியாக அந்த சங்கத்திற்கு போன் செய்த மாவட்ட ஆட்சியர் உரம் இருக்கிறதா என கேட்க, அவர்கள் உள்ளது என்று பதிலளித்ததும் விவசாயியிடம் உரம் இல்லை என்று கூறிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்த அவர், போக்சோ வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு, புதிய கல்விக் கொள்கை மூலமாக இந்தியை திணிக்க முயல்வதாக திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்னை பூதாகரமான நிலையில், தாய்மொழி தினமான இன்று(பிப்.21) தூத்துக்குடி ரயில் நிலைய பகுதியில், இந்தி அழிக்கப்பட்டு ‘தமிழ் வாழ்க’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று(பிப்.20) போக்குவரத்து காவல்துறையினரின் பணியினை ஆய்வு செய்த எஸ்பி ஆல்பர்ட்ஜான், காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ‘Road Safety Patrol’ மாணவர்களின் தன்னார்வத்தையும் சேவை மனப்பான்மையையும் பாராட்டினார். மேலும் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது கவனமாக செயல்பட அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று(பிப்.20) திடீர் ஆய்வில் இறங்கி, 200 இரு சக்கர வாகனங்களை சோதனையிட்டு ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து பல்வேறு வாகனங்களை சோதனை செய்தார். தூத்துக்குடி போக்குவரத்துக் காவல்துறை சார்பாக போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் ஆகியோர் தலைமையில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.