India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக இ-சேவை வாயிலாக பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு 90 நாட்களில் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு கட்ட தவறினால் அவர்களுக்கு உரிய வாகன பணிகள் எதுவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செய்யப்படமாட்டாது என்றும், வாகன உரிமையாளர்கள் தங்கள் அலைபேசி எண்களை ஓட்டுனர் உரிமத்தில் பதிவு செய்யவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அறிவியல் ஆசிரியர் மீது போலீசார் வழக்கு தொடுத்த நிலையில் சற்று முன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நடப்பாண்டுக்கான முதல் கோடை மழை பிப்.28 அன்று தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்.28 முதல் மார்ச்.2 வரை 3 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் காவல்துறையினர் வாரிசு, காவல் ஆளினர்கள் கணவன், மனைவி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை பல்பொருள் அங்காடியில் பெற்று வரும் 27 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். இதில் 284 நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் 265 வாகனங்கள் நம்பர் பிளேட் மாட்டியதும் விடுவிக்கப்பட்டன. நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது குற்றம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திய பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 536 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம்- திருச்செந்தூர் சாலையில் உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ராமன்(42) என்ற கொண்ட ஆசிரியர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அந்த பள்ளியில் உள்ள மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் குடிசை வீடுகளில் வாழ்பவர்கள் வீடு கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்ல திட்டப்படி 2024 – 25 ல் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1673 வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டப்படி கட்டுவதற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கோடை வெயில் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் கடற்கரை பகுதியில் வெயில் பதிவு சற்று குறைவாகவே இருந்தது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் அதிகபட்சமாக 87 பாரன்ஹீட் டிகிரி வெப்பம் பதிவானது. திருச்செந்தூரில் 85 டிகிரி வெப்பம் பதிவானது. பகல் நேர வெப்பம் அதிகரித்ததால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது.
Sorry, no posts matched your criteria.