India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு பயனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நாளை (27) நடைபெற உள்ளது. தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ,கோவில்பட்டி ,கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய வட்டங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
கோவில்பட்டியை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிராக்டர் வாங்க கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்திய பின்னர், வங்கி சுமார் 30 ஆண்டு காலம் தாழ்த்தி, அசல் ஆவணங்களை அவருக்கு வழங்கியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் நீதிபதிகள் 5,10,000 ரூபாய் பணத்தை விவசாயிக்கு வழங்க உத்தரவிட்டனர்.
கேரள மாநிலம் புனலூரில் இருந்து கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி வழியாக மதுரைக்கு இரவு நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தென்மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த ரயிலை திருச்சி வழியாக விழுப்புரம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் சமூக வலைதளத்தை சேர்ந்த நபர்கள் உடன் புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று (செப்.25) நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள சமூக வலைதள பொறுப்பாளர்கள் பத்திரிக்கையாளர்கள் யாரையும் அழைக்கவில்லை. இதற்கு மாவட்ட பத்திரிக்கையாளர் சார்பில் ஊடகவியலாளர் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் பிரம்மோதஸவம் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிரம்மோத்ஸவம் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்காக தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருப்பதிக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் அக்.10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து அக்.5ம்தேதி தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் வைத்து தனியார் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தவுள்ளது. இதில் 150 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.வழக்கு விசாரணையின் போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் தரப்பு வழக்கறிஞர் சிபிசிஐடி அதிகாரி அனில்குமாரிடம் குறுக்கு விசாரணை நடத்தினா். மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விரைவாக விசாரணை நடத்தி் முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டனர்.
கோவில்பட்டியை அருகே உள்ள செண்பகப்பேரியை சேர்ந்த பாண்டி(25) என்பவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாலாட்டின்புதூர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மதன் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர், இதில் சதீஷின் தங்கையை பாண்டி கேலி செய்ததால் நண்பர் மதனுடன் சேர்ந்து பாண்டியை கொலை செய்ததாக சதீஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2024 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.