India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் ம.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக முதல்வரின் தங்கையுமான கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை சிறிது நேரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளார். அதில் “அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளார். இப்பதிவு பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஏப்.17 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 14 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில் மாதம் ஊதியமாக ரூ.15,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<
தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாட்ஷா என்பவரது வீட்டில் மொட்டை மாடியில் செட் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்முகபுரத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், இதில் பரூக் என்ற 13 வயது சிறுவன் காயமடைந்தார். இது குறித்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பகிர்ந்துள்ளது. இரவு நேரங்களில் மற்றொரு வாகனத்தை முந்தும்போது அல்லது நாம் செல்லும் வழித்தடத்தில் (Lane) இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு மாறும்போது சரியான திசையில் இண்டிக்கேட்டரை (Indicator) ஒளிரச் செய்ய வேண்டும் என்றும், இது நமக்கும், நம்மால் மற்றவர்களுக்கும் விபத்து ஏற்படாமல் தவிர்த்திடும் என்று குறிப்பிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் விழாவில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி, கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்களை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் இளம்பகவத் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் பன்னீர் குளத்தில் உள்ளூர் வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த லிதியா என்பவர் தற்போது வெளியான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய Group 1 தேர்வு முடிவில் தமிழகத்தில் 4வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு துணை ஆட்சியர் பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஜி.யு போப் கல்லூரியில் சிபிஎஸ்இ, மெட்ரிக் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏப்.12 அன்று காலை 9 – 2.30 மணி வரை நடைபெற உள்ளது. 14 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்கும் இம்முகாமில் பி.எட் அல்லாத, முன் அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.