Tuticorin

News April 13, 2025

சாத்தான்குளம்: மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இப்ராஹிம் நடுநிலைப் பள்ளியில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் டாக்டர் ரகுமான் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்கு அடுத்தது என்ன படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம்? என்பது குறித்த சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. *மேற்படிப்பு செல்லும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்* *ஷேர் பண்ணுங்க*

News April 13, 2025

ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி பறிமுதல்

image

தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் டேவிஸ்புரம் பகுதியில் பணிப்படை போலீசார் திடீரென வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 49 மூட்டைகளில் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினார். அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 12, 2025

தூத்துக்குடி வாழைப்பழ அல்வா சுவைத்திருக்கிறீர்களா?

image

தூத்துக்குடியில், கிறிஸ்தவ பண்டிகை காலங்களில் செய்யும் ஒரு இனிப்பு பதார்த்தம் தான் வாழைப்பழ அல்வா. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இந்த வாழைப்பழ அல்வா, நாட்டு வாழை, முந்திரி, நாட்டுச்சர்க்கரை, நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. எவ்வித வேதிப்பொருள் கலக்காமல் தயாரிக்கப்படும் இந்த அல்வாவை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர். நீங்கள் சுவைத்ததுண்டா?

News April 12, 2025

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மாவட்ட அளவிலான  விவசாயிகள் குறைவிற்கு நாள் கூட்டம் ஏப்.17 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

காற்றாலை பிளேடுகளை கையாளுவதில் சாதனை

image

இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வஉசி துறைமுகம் நடப்பு ஆண்டில் ( 2024 – 25 ) 2635 காற்றாலை பிளேடுகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே வேளையில் 2030 காற்றாலை பிளேடுகளை மட்டுமே கையாளப்பட்டிருந்தன. தற்போது முந்தைய ஆண்டை விட 29.80% காற்றாலை பிளேடுகளை கையாண்டு துறைமுகம் சாதனை படைத்துள்ளதாக துறைமுக செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2025

ஹைகோர்ட் மகாராஜா கோவில் எங்கே இருக்கு தெரியுமா?

image

சுடலைமாட சுவாமியை காவல் தெய்வமாக கொண்டு வழிபடுபவர்கள் தென் மாவட்டங்களில் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு கோவில் தான் ஆறுமுகமங்கலம் ஹைகோர்ட் மகாராஜா சுடலைமாட சுவாமி கோவில் .இவர் சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாக பிறந்தவர் என்று கூறப்படுகிறது. பார்வதிதேவி கைலாயத்தில் ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்தில் விளக்கின் சுடரில் இருந்து வரும் வெளிச்சத்தில் பிறந்ததால் சுடலைமாடன் என்ற பெயரை கொண்டார்.

News April 12, 2025

தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 12, 2025

தூத்துக்குடியில் சமையல் உதவியாளர் பணி

image

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 104 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. ஊதியமாக ரூ.3,000 முதல் ரூ.9000 வரை வழங்கப்படும். இதில் 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப். 29க்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

News April 12, 2025

விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.1.14கோடி நஷ்ட ஈடு

image

தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர் நான்காம் கேட் அருகே டூவிலரில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதற்கு நஷ்ட ஈடு கோரி கார் உரிமையாளர் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் மீது துரைசிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மனுதாரருக்கு ரூ.1,14,06,486 நஷ்ட தொகை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News April 12, 2025

சைபர் குற்றங்கள் காவல்துறை விழிப்புணர்வு

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில்; அடையாளம் தெரியாத அழைப்புகள் மூலம் வரும் உடனடி கடன் என்று கூறும் லிங்க் மற்றும் செயலியை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் ஏமாந்து விடக்கூடாது எனவும் இத்தகைய சைபர் குற்றங்களில் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!