Tuticorin

News March 15, 2025

குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது

image

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முனியசாமி நகரை சேர்ந்தவர் வெள்ளி சிவி என்ற ராஜா (37). இவரை கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் சுரேஷ் மதுபோதையில் கல்லால் அடித்து கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 15, 2025

த.வெ.க. தூத்துக்குடி பொறுப்பாளர் மாரடைப்பால் மரணம்

image

தூத்துக்குடி தமிழக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் சஜி இன்று(மார்ச் 15) உயிரிழந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு கூட்டத்தின்போது அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம், சஜி நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2025

தூத்துக்குடி SC/ST யினருக்கு கலெக்டர் அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு பல்வேறு அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் தகுதியான நபர்களுக்கு வெளிநாட்டில் வேலை ஏற்படுத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் https://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

தூத்துக்குடி அருகே புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிப்பு

image

தூத்துக்குடி கடல் பகுதியில் தேசிய மீன் மரபணு வள பணியகத்தின் சார்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு வினோதமான மீன்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது புதிய வகை விலாங்கு மீன் ஒன்று நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மீன் இனத்திற்கு ‘தமிழிகம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய மீன் மரபணு வள பணியகத்தின் பொறுப்பு இயக்குநர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். SHARE IT.

News March 15, 2025

தூத்துக்குடியில் 3.300 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டவுன் ஏ எஸ் பி மதன் உத்தரவின்படி அங்கு சென்ற தனிப்படை போலீசார் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 15, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை

image

தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025 ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும். கப்பல், படகு வடிவமைப்பு, கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

News March 14, 2025

தூத்துக்குடி: 403 கிராம பஞ்சாயத்திற்கும் ஆட்சியர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கிராம ஊராட்சிக்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 172, 174 மற்றும் 242 இன் படி வரி செலுத்த வேண்டும். எனவே சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து வரிகளையும் மார்ச்.31க்குள் ஊராட்சி அலுவலகத்தில் கட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். *நண்பர்களுக்கு பகிரவும்*

News March 14, 2025

தூத்துக்குடி மாவட்ட பட்ஜெட் அறிவிப்புகள்

image

▶️தூத்துக்குடி, உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ7 கோடி நிதி ஒதுக்கப்படும்

▶️ தூத்துக்குடியில் முதியவர்களுக்கு அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்படும்.

▶️ தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும்

▶️தூத்துக்குடியில் புதிய ஜவுளி பூங்கா

▶️தூத்துக்குடியில் புதிய மீன்படி இறங்குதளம்

உங்க ஊர் அப்டேட்ட உங்க நண்பருக்கு SHARE பண்ணுங்க

News March 14, 2025

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மேலும் ஒரு பெருமை 

image

தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூர் பகுதியில் பல்வேறு தொல்லியல் நாகரிகங்கள் இருந்ததாக சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து இன்று வெளியான தமிழக பட்ஜெட்டில் பட்டினமருதூரில் புதியதாக தொல்லியல் அகழாய்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!