Tuticorin

News October 5, 2024

சென்னை – தூத்துக்குடி விடுமுறை கால சிறப்பு ரயில்

image

நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06186) அக்டோபர் 8 அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.50 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

News October 5, 2024

தூத்துக்குடி எழுத்தாளருக்கு ஐஏஎஸ் பதவி?

image

தூத்துக்குடியில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு எழுத்தாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனின் பெயருக்கு பின்னால் இ.ஆ.ப (IAS) என பொறிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News October 5, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணமில்லா பயிற்சி

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ், ஆர்பி, டிஆர்பி ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் கட்டணமில்லா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த வகுப்புகள் வரும் 9ஆம் தேதி துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

டி.என் அலார்ட் வானிலை செயலி அறிமுகம்

image

டி.என் அலார்ட் என்ற தமிழ் வானிலை அறிவிப்பு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வானிலை முன்னறிவிப்பு, தினசரி மழை அளவு, நீர் தேக்கம் போன்றவைகளும், பேரிடர் காலத்திற்கு புகார்களையும் இந்த செயலி மூலம் தெரிவிக்கலாம் என்றும் இதனை கூகுள் பிளே ஸ்டோரில் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி நன்றி

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (அக்.4) தனது முகநூல் பக்கத்தில்; சென்னை மெட்ரோ 2ம் கட்ட நிதிக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழக முதல்வரின் டெல்லி பயணத்தின் போது இந்த நிதியைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக மனமார்ந்த நன்றி. அவரது தலைமையின் கீழ் சென்னையை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியை இந்த மைல்கல் குறிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

News October 5, 2024

தூத்துக்குடி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 04.10.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

மாலத்தீவிற்கு தோணி போக்குவரத்து துவங்கியது

image

தூத்துக்குடியில் இருந்து இலங்கை மாலத்தீவு லட்சத்தீவுக்கு காய்கறிகள் கட்டுமான பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்படும். கடல் பருவநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த தோணி போக்குவரத்து நேற்று (அக்.3) முதல் மீண்டும் துவங்கியுள்ளது. மாலத்தீவிற்கு காய்கறிகள், மண், ஜல்லி கட்டுமான பொருட்களுடன் முதல் தோணி புறப்பட்டுச் சென்றது.

News October 4, 2024

டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

image

விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடையிலிருந்து விளாத்திகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று இன்று (அக்.4) சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து வில்வ மரத்துப்பட்டி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்து பேருந்து அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த 30 பயணிகள் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 4, 2024

சுப்பிரமணிய சிவாவின் பிறந்தநாள் இன்று

image

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர முரசு என்று அழைக்கப்பட்டவர் சுப்பிரமணிய சிவா. கனல் பறக்கும் மேடைப்பேச்சு மற்றும் எழுச்சியூட்டும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் இவர். வஉசியின் சிறந்த நண்பர். 1908ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள கோரல் மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் முன்னிலை வகித்து அந்த போராட்டத்தை வெற்றியடைய செய்தவர். தூத்துக்குடி தொழிலாளர்களால் நினைவு கூறப்பட வேண்டியவரின் பிறந்த தினம் இன்று.

News October 4, 2024

திருச்செந்தூர் கோவிலில் திருமணத்திற்கு சிறப்பு ஏற்பாடு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.60 ஆயிரம் பயணத் திட்டத்தில் திருமணம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே ஏழை எளிய பொதுமக்கள் இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு கோவில் நிர்வாகத்தில் தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று(அக்.03) தெரிவிக்கப்பட்டுள்ளது.