Tuticorin

News October 11, 2024

தூத்துக்குடியில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தல் – கைது

image

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் வெள்ளப்பட்டி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வேனை சோதனை செய்ததில் சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தப்பட்ட 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட பண்டாரம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

News October 11, 2024

பைக் ஷோரூம் பில் மோசடியில் மூன்று ஆண்டு சிறை

image

தூத்துக்குடி சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது ஷோரூமில் பணி புரிந்த எழில் நகர் குரு ராஜ் என்பவர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு தினமும் ஆன்லைன் மூலம் கட்ட வேண்டிய ரூ.4 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குருராஜுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

News October 11, 2024

வேட்டையன் பட இயக்குனர் மீது போலீசில் புகார்

image

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படத்தில் கோவில்பட்டி காந்தி நகர் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியை ஒருவரை ஆபாசமாக திட்டுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான பள்ளி என்று விருது பெற்ற அரசு பள்ளியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சி அமைத்த இயக்குனர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

News October 11, 2024

திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரயில் ரத்து

image

நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருச்செந்தூரில் இருந்து மாலை 4:25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் நெல்லை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் வருகின்ற 15 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 22 ஆம் தேதி வரை திங்கள்கிழமை மற்றும் தீபாவளி நாளை தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 11, 2024

மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்திற்கு விற்பனை

image

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மல்லிகைப் பூ கிலோ ரூ.600 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.1000 ஆக விற்பனையாகிறது. இன்று இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 10, 2024

சூரசம்கார முன்னேற்பாடுகள் ஆட்சியர் ஆய்வு

image

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் இம்மாதம் 12 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News October 10, 2024

முரசொலி செல்வம் மறைவுக்கு அமைச்சர் இரங்கல் செய்தி

image

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் மருமகனும் – தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் பிறந்த சகோதரி செல்வியின் கணவருமான, மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் மறைவுக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தனது வலைத்தள பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

முரசொலி செல்வம் மறைவுக்கு அமைச்சர் இரங்கல்

image

முரசொலி செல்வம் மறைவை அடுத்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தனது முகநூல் பக்கத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மருமகனும் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஸ்டாலினின் உடன் பிறந்த சகோதரி செல்வியின் கணவருமான மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

News October 10, 2024

தசரா திருவிழா: 24 மணி நேர மருத்துவ வசதி

image

குலசேகரபட்டினம் தசரா திருவிழாவில் 11, 12, 13 ஆகிய நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக கோயில் கடற்கரையில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

ரத்தன் டாடா மறைவு கனிமொழி எம்பி இரங்கல்

image

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், ரத்தன் டாடாவின் மறைவு இந்தியாவுக்கு பெரும் இழப்பு. அவரது நேர்மை, சமூக அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமை எப்போதும் நினைவில் இருக்கும். அவருடைய பணிவு மற்றும் எளிமையால் நான் எப்போதும் வியந்திருக்கிறேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், அவரது பரோபகார மனப்பான்மையும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றுள்ளார்.