India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூபாய் 68.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகம் மற்றும் நீரேற்று நிலையம் போன்ற நான்கு முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
தீப்பெட்டி உற்பத்தி தொழிலை பாதிக்கும் சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு நேற்று சீன லைட்டர் உறுதி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி எம்.பி கனிமொழி நாளை (14) மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை 9 மணிக்கு ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்குகிறார். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அண்ணா ராஜ் (37) மற்றும் இக்பால் (30) இருவரும் ரவுடிகள் பட்டியலில் கண்காணிக்கப்பட்டு வருபவர்கள். இந்நிலையில் இருவரும் ஒரு சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
சென்னையில் முதலமைச்சர் கோப்பை காண மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் அணி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. இவர்களுக்கு சான்றிதழ், பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், கோவில்பட்டி, திருவைகுண்டம் ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசராதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு கோவில் கடற்கரை திடலில் நடைபெற உள்ளது. கோவில் கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சிங்கா இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; கவரப்பேட்டையில் நிகழ்ந்ந மைசூர் – தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். விபத்து நிகழ்ந்த பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்தியுள்ளார். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (அக்.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்.11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.