India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி மூப்பன்பட்டியில் போலீசார் 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேறு ஒரு இடத்தில் 1 கிலோ கஞ்சா பிடிபட்டது. நேற்று 22 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. ஒடிசா போன்ற இடங்களில் இருந்து கடத்தி வரும் கஞ்சா கோவில்பட்டியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து, ரோந்து மேற்கொள்ள கோரிக்கை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் புதிய மனுக்கள் என மொத்தம் 66 மனுக்கள் வழங்கப்பட்டன. இதனை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
காயாமொழி அருகே குதிரைமொழி-தேரிகுடியிருப்பு கிராமத்தில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயிலுக்கு, விடுமுறை நாட்களில் ஆன்மீகப் பயணமாக பக்தர்கள் வருகை தருகிறார்கள். கார்த்திகை மாதம் இக்கோயிலில் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவின்போது கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் புனித மண் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி, வீடு, கடைகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை எல்லோருக்கும் *SHARE* பண்ணுங்க.
தூத்துக்குடி, அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளையும் புகார்களையும் இந்த வாட்ஸ் ஆப் எண் 80980 24555 மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்(80980 24555) மூலமாகவோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் <
தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், டெப்போ மேனேஜர்கள் தொடர்பு எண்கள்
▶️ பொது மேலாளர் -9487599051
▶️ துணை மேலாளர் – 9487599053
▶️ தூத்துக்குடி புறநகர் – 9487599063
▶️ தூத்துக்குடி நகர் – 9487599064
▶️ ஸ்ரீவைகுண்டம் – 9487599066
▶️ விளாத்திகுளம் – 9487599067
உங்கள் ஊரில் பேருந்துகள் நிற்கவில்லை அல்லது பேருந்தில் ஏற்ற மறுத்தாலோ இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் (23) எட்டையாபுரம் சாலையில் நடந்து சென்றபோது இவரின் 120000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அருண்குமார் (22), மாடசாமி (24), முத்துசெல்வம் (20), முத்தீஸ்வரன் (27) ஆகிய நான்கு பேரும், பறித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேரையும் விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் மயிலப்புரம் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் தற்போது உடன்குடி கொட்டாங்காடு பகுதியில் குடியிருந்து வருகிறார். நேற்று நேற்று (ஏப்.29) திருச்செந்தூர் சென்று விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி உள்ளார். தோப்பூர் விலக்கு அருகே சென்ற போது நிலை தடுமாறி முன்னாள் சென்ற லாரியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஊர்க்காவல் படை உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில் தூத்துக்குடி ஊர்காவல் படையில் 20 ஆண்டுக்காலம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படை தளபதி உலகம்மாளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவரை நேற்று கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (ஏப்ரல் 30) குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மனுக்கள் மற்றும் ஏனைய மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.