India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி அன்று கடைகள் வர்த்தக நிறுவனங்கள் உணவு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(அக்.02) விடுமுறை அளிக்காத 45 கடைகள் 43 உணவு நிறுவனங்கள் ஒரு மோட்டார் நிறுவனம் உட்பட 89 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நில எடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த கிருஷ்ணகுமாரி, செல்வகுமார், மணிகண்டன், லட்சுமி ஆகிய நான்கு தனி தாசில்தார்களை நெடுஞ்சாலை அழகு & திட்ட பணிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் 7 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் நாளை அக்.4 முதல் அக்.8ம் தேதி வரை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் திருச்சியில் நடைபாதை பணிகள் நடைபெறுவதால் திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 6 ,8 ,10 தேதிகளில் இரவு 8:25 க்கு பதில் 10.35 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி காலநிலை மாற்ற அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொழில்நுட்ப உதவியாளர்கள் கள அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர், தகுதியான பட்டப் படிப்பு படித்தவர்கள் இம்மாதம் 10 ம் தேதிக்குள் காலநிலை மாற்ற இயக்கம் வனத்துறை அலுவலகம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய சுந்தர் (69). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை இவர் அவரது டீக்கடையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவில்பட்டி பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி விவசாயத்தை துவக்கி உள்ளனர். ஆனால் உரக்கடைகளில் டிஏபி உரம் வாங்கினால் வேறு ஒரு உரமும் வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனர். எனவே கூட்டுறவு சங்கங்களின் டிஏபி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்/
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அந்தந்த காவல் நிலைய பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தாளமுத்து நகர் போலீசா காமராஜர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 5 பேரை கலைந்து போகும் படி கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் போலீசாரை அரிவாளைக் காட்டி மிரட்டி உள்ளனர். இதனையடுத்து தவ்ஹீத் நபில் உட்பட ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் இன்று (அக்.1) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி, “தமிழ்க் கலையுலகின் தன்னிகரற்ற கலைஞர். ‘கர்ணன்’, ‘கட்டபொம்மன்’, ‘மனோகரன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற வரலாற்று நாயகர்களை திரையில் உயிர்ப்பித்த நடிகர் திலகம், பத்மஸ்ரீ சிவாஜி கணேசனின் 97வது பிறந்த தினத்தில் அவரது நினைவைப் போற்றுவோம்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி பிஅன்ட் டி காலனியை சேர்ந்தவர் செல்வகணபதி வணிகவரித்துறை ஊழியர் கடந்த 27ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு விஷேத்திற்கு குடும்பத்துடன் கேரளா சென்றார.நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வீட்டின் பின்பக்க கதவில் ஒட்டை போட்டு பீரோவில் இருந்த 3 பவுன் ரூ.12,500 திருடியுள்ளனர். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை செய்கின்றனர்
Sorry, no posts matched your criteria.