Tuticorin

News July 5, 2025

தூத்துக்குடியில் புகார் எண் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் சார்பில் மாநகராட்சியில் புகார் அளிக்கபட்டது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுபடுத்தும் விதமாக கட்டணம் இல்லா தொலைபேசி 1800 2030401 என்ற எண்ணை மேயர் ஜெகன் அறிவித்துள்ளார்.

News July 5, 2025

சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்

image

சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் இந்து மகா சபை சார்பில் அறிவிக்கபட்ட போராட்டம் தொடர்பாக தாசில்தார் பொண்ணு லட்சுமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அரசூர் ஊராட்சியை முற்றுகையிடும் போராட்டம் தொடர்பாக சமாதானமாக பேசி முடிக்கபட்டது. இதனை அடுத்து போராட்டம் கைவிடபட்டது. இதில் இந்து மகா சபை நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 8, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

image

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

image

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

தூத்துக்குடி : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️தூத்துக்குடி SP- ஆல்பர்ட் ஜான் – 04612330111
▶️கோவில்பட்டி DSP – ஜெகநாதன் -9865695944
▶️சாத்தான்குளம் DSP – சுபகுமார் – 9498183830
▶️விளாத்திகுளம் DSP – அசோகன் – 8072667032
▶️ஸ்ரீவைகுண்டம் DSP – ராமகிருஷ்ணன் -9442587777
▶️திருச்செந்தூர் DSP – மகேஷ் குமார் -7708467248
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)

News May 7, 2025

தூத்துக்குடியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட விற்பனை அதிகாரி காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து 09-06-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News May 7, 2025

உடன்குடி அருகே கார் விபத்தில் மாணவர் பலி

image

திசையன்விளை கரைச்சுத்துபுதூர் சாய்ராம்(18), பிளஸ் டூ மாணவரான இவர் தன் உறவினர் சிலருடன் திருச்செந்தூரில் ஒரு திருமணத்திற்காக நேற்று காரில் வந்துள்ளார். கார் உடன்குடி சமாதானபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சாய்ராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கஞ்சா விற்பனை மையமாக மாறுகிறதா கோவில்பட்டி?

image

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி மூப்பன்பட்டியில் போலீசார் 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேறு ஒரு இடத்தில் 1 கிலோ கஞ்சா பிடிபட்டது. நேற்று 22 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. ஒடிசா போன்ற இடங்களில் இருந்து கடத்தி வரும் கஞ்சா கோவில்பட்டியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து, ரோந்து மேற்கொள்ள கோரிக்கை.

error: Content is protected !!