India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் 4,857 மெட்ரிக் யூரியா கையிருப்பு உள்ளது. மேலும் 2569 டன் காம்ப்ளக்ஸ் 3065 மெட்ரிக் டன் டிஏபி 471 மெட்ரிக் டன் டிஏபி, 471 மெட்ரிக் டன் பொட்டாஸ் கையிருப்பு உள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மழை வெள்ள காலங்களில் முன்கூட்டியே மழை வெள்ள நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க டிஎன் அலார்ட் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நான்கு நாட்கள் அடுத்தடுத்து வானிலை அறிவிப்பை தெரிந்து கொள்வதுடன் மழை வெள்ள பாதிப்பு குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் இன்று(அக்.26) தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு விற்பனை நடைபெற்றது. தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்யவும் வாங்கிச் செல்லவும் வந்திருந்தனர். இதுவரை ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கால்நடைகளுக்கான கணக்கெடுப்பு பணி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(அக்.25) முதல் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மட்டுமே கால்நடை வளர்ப்போருக்கு நலத்திட்டங்கள் கிடைக்கும் என்பதால், கால்நடை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தர அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன்(29), நிஷாந்த்(25) இருவரும் தூத்துக்குடியில் இருந்து குற்றாலத்தில் குளிப்பதற்காக ஒரே பைக்கில் சென்றுள்ளனர். நேற்று(அக்.25) அதிகாலை ஆலங்குளம் மாறாந்தை சுங்கச்சாவடி வேகத்தடையில் வந்தபோது பைக் நிலைகுலைந்து கீழே விழுந்தது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிஷாந்த் காயமடைந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் எண்.06088 ஷாலிமார் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 26 அன்று காலை 17.10 மணிக்கு ஷாலிமாரில் இருந்து புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக” அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி வேளாண் விரிவாக்கம் மையங்களில் நெல் 30.71 மெட்ரிக் டன், சோளம் 10.22 மெட்ரிக் டன், கம்பு 20.325 மெட்ரிக் டன், உளுந்து 15.556 மெட்ரிக் டன், பாசி 0.599 மெட்ரிக் டன், நிலக்கடலை 12.995 மெட்ரிக் டன் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி துவங்க உள்ள கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.