Tuticorin

News October 31, 2024

தீபாவளியையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

image

தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து வீட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தனம் செய்தனர்.

News October 31, 2024

பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லம் – ஆட்சியர் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து குழந்தைகள் இல்லங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லங்களுக்கு ஒரு மாத காலம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லம் கண்டறியப்பட்டால் அவை மூடி சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார.

News October 31, 2024

தொழிலாளர் நலநிதி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைய அலுவலகம் நேற்று (அக்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொழிற்சாலைகள், கடைகள், போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் நல நிதியை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். ஒவ்வொரு தொழிலாளருக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 60 என கணக்கிட்டு, நிதியை 2025ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

News October 31, 2024

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் – தூத்துக்குடி போலீஸ்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை மட்டும் பயன்படுத்தவும் பட்டாசுகளை அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டும் வெடித்திடவும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News October 31, 2024

இரவு நேர ரோந்து போலீசார் விவரம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பெயர் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News October 31, 2024

கயத்தாறு அருகே விபத்தில் சமையல் மாஸ்டர் பலி

image

பன்னீர் குளம் கிராமத்தில் கீழ்த் தெருவில் வசித்து வந்தவர் கோபால், வயது 46. சமையல் மற்றும் விவசாய வேலை செய்து வந்தார். இந்நிலையில், கயத்தாறில் இருந்து பன்னீர்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சாமான்கள் வாங்கிக் கொண்டு சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த கோபால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 30, 2024

தேவர் பிறந்த நாள் கனிமொழி எம்பி வாழ்த்து

image

முத்துராமலிங்கர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், “ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போரில் முன்னின்றவர்; வேற்றுமைகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகப் பாடுபட்டவருமான பசும்பொன் பெருமகனாரின் பிறந்தநாளில், அவரின் அரும்பணிகளை போற்றிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News October 30, 2024

சிறப்பாக பணியாற்றிய 69 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

image

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.03ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் ஊர் காவல் படை காவலர்கள் 69 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News October 30, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.65 லட்சம் வாக்காளர்கள்

image

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேற்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 65 ஆயிரத்து 127 வாக்காளர்கள் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.

News October 29, 2024

தீபாவளி விமான கட்டணம் அதிரடி உயர்வு

image

தீபாவளி பண்டிகை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானத்திற்கான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் சென்னைக்கு 4,010 ரூபாய் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 8,976 முதல் 13,317 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!