India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் எஸ்.எஸ்.ராஜன் கோப்பை போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நவ.3ஆம் தேதி காலை 7 மணி அளவில் தூத்துக்குடி பெரிசன் பிளாசா எதிரே உள்ள JMJ கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் 01.09.1984 அன்றோ அதற்கு பின்ரோ 31.08.2011 பிறந்திருக்க வேண்டும். விவரங்களுக்கு 8015621154, 875400437, 9944833333 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வரும் 14ஆம் தேதி வருகை தர உள்ளார். அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிடுகிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன்குடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருக்கும் படுக்கப்பத்து மணிகண்டன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தநிலையில் பழிக்கு பழி வாங்க நேற்று (நவ.1)தல தீபாவளிக்கு கோவிந்தராஜன் வீட்டுக்கு வந்திருந்த தங்கை முத்துலட்சுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மணிகண்டன் தம்பி தாஸ் முத்துலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். குலசேகரபட்டினம் போலீசார் தாஸை தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வி பயிற்சி கல்லூரியில் நவ.3 மாவட்ட ஜூனியர் பெண்கள் கபடி அணி தேர்வு நடக்க இருக்கிறது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் நடத்தும் ஜூனியர் பெண்கள் 59-வது மாநில சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்வு நவ.3ல் நடைபெற உள்ளது என தூத்துக்குடி அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் இன்று தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ01) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் பிரபல திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது வெற்றி படமான பரியேறும் பெருமாள் படத்தில் புளியங்குளத்தை சேர்ந்த நாய் ஒன்று முக்கிய காட்சியில் நடித்துள்ளது. இந்நிலையில், இன்று (நவ.1) இந்த நாய் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. இதனால் புளியங்குளம் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு 800 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணுயிர் பாசன திட்டம் செயல்படுத்த ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 429 விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த ஆட்டோ வாங்க ரூ.5 லட்சம் வரை முப்பது சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியான ஆட்டோ ஓட்டுநர்கள் http://www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க தூத்துக்குடி அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் நடத்தும் ஜூனியர் பெண்கள் ஐம்பதாவது மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டி திருவண்ணாமலையில் வருகிற எட்டாம் தேதி துவங்க உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வி கல்லூரியில் வைத்து நவ.3ஆம் தேதி நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.