Tuticorin

News November 4, 2024

தூத்துக்குடியில் தமிழ் வட்ட எழுத்து கல்வெட்டு 

image

பட்டினமருதூர் அருகே உள்ள வீரபாண்டிய விநாயகர் கோவிலில் வரலாற்று ஆய்வாளர் ராஜேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல், அங்குள்ள உப்பளம் அருகே வழிபாடு செய்யப்பட்டு வந்த சதிகல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை இரண்டும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

News November 4, 2024

வில்லிசேரி அருகே கார் விபத்து – உயிர் தப்பிய பேராசிரியர்

image

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவர் ஜாய் பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு சென்று விட்டு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு பணியாற்றுவதற்காக காரில் தனியாக சென்றுகொண்டிருந்தபோது கயத்தாறு அருகே வில்லி சேரி நாற்கரச் சாலையில் கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

News November 3, 2024

 திருச்செந்தூரில் பலத்த போலீசார் பாதுகாப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா(நவ.2) கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு 2காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் ,6 துணைகண்காணிப்பாளர்கள், 27ஆய்வாளர்கள் உட்பட1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் CCTV கேமராக்கள் அமைக்கபட்டு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்

News November 3, 2024

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மறைவு

image

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நேற்று(நவ.2) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வி. முத்து குட்டி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். காங்கிரஸ் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். பழகுவதற்கு இனிமையானவர். சிறந்த பண்பாளர் என்று புகழாரம்.

News November 3, 2024

திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி திருவிழா 

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று(நவ.2) துவங்கி நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று(நவ.3) காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாஸ் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாலை 4 மணிக்கு கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

News November 3, 2024

கந்த சஷ்டி ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. வரும் ஏழாம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News November 3, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீஸ் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றச்செயல்களும் அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில், இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் விவரங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News November 2, 2024

தூத்துக்குடி சென்னை விமான கட்டணம் மேலும் உயரும்?

image

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூபாய் 4,100 ஆக இருந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஒட்டி ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் தூத்துக்குடி சென்னை விமான கட்டணம் ரூபாய் 13,317 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விடுமுறை முடிந்து ஊர் திரும்புவார்கள் என்பதால் விமான கட்டணம் மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

News November 2, 2024

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு வரும் 4ஆம் தேதி தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

4ம் தேதி ஆளில்லா ரோந்து படகு தூத்துக்குடி வருகை

image

இந்திய கடற்படையின் சாகர்மாலா பரிக்ராமா திட்டத்தின் கீழ் மாதங்கி என்ற ரோந்து படகு மனித தலையீடு இல்லாமல் சவாலான கடல் நிலைமைகளை நிர்வகிக்கவும் கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்யவும் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி மும்பையில் இருந்து தனது கடல் வழி சோதனையை துவங்கிய இந்த ரோந்து படகு வரும் நான்காம் தேதி தூத்துக்குடி வந்து தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது.

error: Content is protected !!