India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் பெரியதாழையில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் படகில் சென்று நடுக்கடலில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படகில் மகளிர் சுய உதவி குழுவினர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் பதாகைகளை பிடித்தபடி கோஷங்களை முழங்கினர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரான கனிமொழி எம்பி ஆறுமுகநேரி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அடைக்கலாபுரம், காமராஜபுரம், ராணிமகாராஜபுரம் , பெருமாள்புரம், செல்வராஜபுரம், மடத்துவிளை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார். அவருடன் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் தொகுதி வி.சி.க. மாவட்டசெயலாளர் டிலைட்டா உள்ளிட்டோர் இருந்தனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் வேட்பாளர் பிஷப் காட்பிரி நோபல் என்ற பாதிரியார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தர். அப்போது அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது, தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 106 மையங்களில்10 ஆயிரத்து 854 மாணவர்கள் 11, 453 மாணவிகள் என மொத்தம் 23,237 மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி நாளை (மார்ச் 026) காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். தூத்துக்குடியில் மீண்டும் 2வது முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இன்று காலை அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எனவே, தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் உள்ள 65 வயதிற்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் (JCO’s) மற்றும் இதர முன்னாள் படைவீரர்கள் (OR) தங்கள் விருப்பத்தினை தெரிவிக்கலாம். அதன்படி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், தூத்துக்குடியில், தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காயாமொழி அருகே உள்ள தண்டப்பத்தில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினார் இது சம்பந்தமாக பாஜகவினர் தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகாரியின் அடிப்படையில் மெய்ஞானபுரம் போலீசார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 294/B யில் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி யிடம் மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.