India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜேஸ்வரன் என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் முரளி என்பவர் தோல்வியுற்றார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முத்தையாபுரத்தில் உள்ள ராஜன் என்பவர் பேக்கரியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு தின்பண்டங்கள் தயாரிக்கும் கூடம் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், காலாவதியான பொருட்கள் இருப்பதையும் கண்டுபிடித்ததால் பேக்கரியை மூடி சீல் வைத்தனர்.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர், தூத்துக்குடி, கயத்தாறு, விளாத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
குலசேகரப்பட்டினம் வடக்கூர் உள்ள அருள்மிகு வீர மனோகரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து கோவில் கொடி மரத்திற்கு பால் தயிர் சந்தனம் இளநீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிழா இம்மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மதுரை கோட்டத்தில் இந்த மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் ஏழாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 6: 25 மணிக்கு செல்லும் நெல்லை ரயிலும் நெல்லையிலிருந்து காலை 7: 35 க்கு புறப்படும் தூத்துக்குடி ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று முதல் 16ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முதியோர் ஊனமுற்றோர் நலன் கருதி இன்று முதல் 16ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் இதைப்போல் மைசூர் எக்ஸ்பிரஸ் 15ஆம் தேதி வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவில்பட்டி விநாயகர் நகரை சேர்ந்த நில புரோக்கர் துரை. நேற்று இவர் எட்டையாபுரம் குமார கிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஶ்ரீவைகுண்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தாமாகா கட்சி வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது “மீண்டும் மோடி பிரதமராக வருவார். அப்போது இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் மாறும்” என்று அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மொத்தம் 1,622 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் கூடுதலாக தலா ஒரு வாக்குச்சாவடிகள் அமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது .இதற்கு தேர்தல் ஆணையம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,624 ஆக உயர்ந்துள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்திற்காக நெல்லை சென்றபோது மூன்றாவது மைல் அருகே அவரது வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.