Tuticorin

News April 2, 2025

தூத்துக்குடியில் மீனவர்கள் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் மீனவர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் ஏப்.4 அன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மீனவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

கோவில்பட்டியில் பைக் மோதியதில் முதியவர் பலி

image

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). இவர் நேற்று  நாலாட்டின்புதூர் அருகே நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த பைக் ஒன்று இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2025

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

image

தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய எஸ்ஐ முத்தமிழ் ஆகியோர் வழக்கறிஞர் தொழிலுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தினர் 02.04.25 முதல் சனிக்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு இன்று வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

News April 2, 2025

தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

News April 1, 2025

தூத்துக்குடி மீனவர் குறை தீர்ப்பு கூட்டம் அறிவிப்பு 

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து காலை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று தெரிவித்துள்ளார். மீனவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு குறிகளை தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 1, 2025

கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி – கலெக்டர் அறிவிப்பு 

image

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி  வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

தூத்துக்குடி:பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் விநாயகர் கோயில்

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. விநாயகருக்கு தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கிய கோயில்களில் ஒன்று, இக்கோயிலில் திருவிழாவும் சிறப்பாக நடக்கும். வழக்குகளில் இழுபறி, அடிக்கடி உடல்நலக் குறைவு, திருமணத் தடை, படிப்பில் குறைபாடு, பணப்பிரச்சனைகள் இருந்தால், இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் காரியம் சிறப்பாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*

News April 1, 2025

தூத்துக்குடியில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

ரயில் பெட்டியின் கீழ் ஆண் சடலம்

image

நேற்று முன்தினம் நாகர்கோயிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் கோவில்பட்டி ரயில்நிலையத்தில் நின்ற போது, பொது பெட்டியின் கீழ் 40 வயது மதிக்க தக்க ஆண் சடலம் கிடந்தது.இதுகுறித்து கோவில்பட்டி வி.ஏ.ஓ கவிதா தூத்துக்குடி ரயில்வே போலீஸில் புகார் தெரிவிக்க,போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.இறந்தவரின் உடலில் தீக்காயம் இருந்துள்ள நிலையில் போலீசார் இறப்பிற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

News April 1, 2025

தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!