India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பௌர்ணமி முடிந்த 2ஆம் நாளான நேற்று(நவம்பர் 16) இரவு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் பௌர்ணமி நிலவு தரிசனம் மேற்கொண்டனர். பிரமாண்ட நிலவு மாலை 6.30 மணிக்கு மேல் தோன்றியது. இதைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டனர். நிலவு தோன்றியதும் அதைப் பலர் படம் பிடித்து ரசித்த வண்ணம் இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(நவ.,16) பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த வகையில் ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேட்மா நகரத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் புதிய தார் சாலை பணிகளை நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள துணை மின் அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த கண்ணன்(49). ஜூனியர் இன்ஜினியராக வேலைபார்க்கிறார். நேற்று முன்தினம்(நவ.14) பணியில் இருந்த கண்ணன், அலுவலகத்தில் தனியாக இருந்த பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய, சாத்தான்குளம் போலீசார் நேற்று(நவ.15) கண்ணனை கைது செய்தனர்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நல குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சுரேஷ் சங்கையா உடல் கோவில்பட்டி அருகில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ15) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க விருப்பம் இல்லாதவர்கள், தங்கள் உரிமத்தை விட்டுக் கொடுத்துவிட அரசின் மாவட்ட வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பொருள் இல்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளதால் இன்று மற்றும் 17ஆம் தேதி இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. அதேபோல் மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வருகையில் 16 மற்றும் 18ஆம் தேதிகளில் இரண்டு கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பெண்களுக்கு சொத்தில் பங்கு, வேலைவாய்ப்பில் 30 சதவீதம், மகளிர் சுய உதவி குழு என்று சாதனை படைத்தவர் திமுக தலைவர் கலைஞர். இந்த வரலாறு எல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களுக்கு தெரியாது என்று அவர் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக மேலாளர் ரோகிணி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அயற்பணி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் தூத்துக்குடி உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் மாரியம்மாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அயற்பணி கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.