India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கும்படி திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி ஒன்றாம் கேட் பகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறுகளை வழங்கினார்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில், கடற்கரை ஓரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற இக்கோயில் 2000-3000 ஆண்டுகள் பழமையானதாககும். 157 அடி உயர கோபுரம் உடைய இக்கோவில், கடலை பார்த்தபடி அமைந்திருக்கிறது. தமிழ்கடவுளான முருகனுக்கு நடைபெறும் திருவிழாக்களில், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலகப் புகழ் பெற்றதாகும்.
தற்போது மாம்பழ சீசன் என்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதோடு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருள் கடத்தலை தடுப்பதற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 8300014567, 9514144100 என்ற அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதைப் பொருள் கடத்தலை தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வீரபாண்டிய பட்டணம் கடற்கரையில் இருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற சந்துரு, பாலமுருகன், ராஜா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 39 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை,பேருந்து பழுது காரணமாக 30 வழித்தடங்களில் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது மதுரை,தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு பேருந்து சேவை மேலும் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் இன்று தெற்கு ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர். கோடை விடுமுறையை முன்னிட்டு தற்பொழுது, தூத்துக்குடியில் இருந்து சென்னை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகம் உள்ளதால் தூத்துக்குடியில் இருந்து இரவு நேரத்தில் சென்னைக்கு கூடுதலாக ரயில் ஒன்று இயக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் பாஸ்கர் வியாபாரியான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கும் இவரது மனைவி வெங்கடேஸ்வரிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக பாஸ்கர் திடீரென்று தலைமறை வாங்கி விட்டார். இது சம்பந்தமாக வெங்கடேஸ்வரி நேற்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (63) நுங்கு வியாபாரி. நேற்று இவர் கோவில்பட்டியில் வியாபாரம் முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சிதம்பராபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது பற்றி நாலாட்டின் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.