India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை மட்டும் பயன்படுத்தவும் பட்டாசுகளை அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டும் வெடித்திடவும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பெயர் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பன்னீர் குளம் கிராமத்தில் கீழ்த் தெருவில் வசித்து வந்தவர் கோபால், வயது 46. சமையல் மற்றும் விவசாய வேலை செய்து வந்தார். இந்நிலையில், கயத்தாறில் இருந்து பன்னீர்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சாமான்கள் வாங்கிக் கொண்டு சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த கோபால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துராமலிங்கர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், “ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போரில் முன்னின்றவர்; வேற்றுமைகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகப் பாடுபட்டவருமான பசும்பொன் பெருமகனாரின் பிறந்தநாளில், அவரின் அரும்பணிகளை போற்றிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.03ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் ஊர் காவல் படை காவலர்கள் 69 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேற்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 65 ஆயிரத்து 127 வாக்காளர்கள் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானத்திற்கான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் சென்னைக்கு 4,010 ரூபாய் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 8,976 முதல் 13,317 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடியிலிருந்து தாம்பரத்திற்கு இன்று & நவம்பர் 4 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு காலை 10:20க்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து 30ஆம் தேதியும் நவம்பர் 5ம் தேதியும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து பகல் 12:20க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையொட்டி இனிப்பு காரவகை பலகாரங்கள் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். சுகாதாரமான பாதுகாப்பான உணவுகளையே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைத்து இன்று(அக்.29) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி காலை 9.45 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.