India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது ஸ்தலமாக விளங்கும் கள்ளபிரான் திருக்கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் ஊர்வலமாக வந்து பின்னர் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) தூத்துக்குடிமாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் பேசிய ராஜவேல் என்பவர் நீங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ.10 கோடி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் வீடியோ காலில் பேசிய ராஜவேல் என்பவருக்கு ரூ.4.88 லட்சம் பணமாக கொடுத்து ஏமாந்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் ராஜவேலை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதே வேளையில் தூத்துக்குடியில் உப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான பழைய உப்பின் விலை தற்போது தரத்துக்கு ஏற்ப ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகுகள் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரையில் கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மினி சகாயபுரத்தை சேர்ந்தவர் சேசு (26) விசைப்படகு மீனவர். இவர் இன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று படகிலிருந்து தவறி கடலில் விழுந்து இறந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் இவரது உடலை மீட்டனர். இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள தேக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த உச்சிமாகாளி (53) என்பவர் நேற்று இரவு அப்பகுதியில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு சைக்கிளில் அவரது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கார் ஒன்று அவரது சைக்கிள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பெரியநாயகிபுரத்தில் நேற்று தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த மாரிச்செல்வம் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சா,ரூ.4,000 இரண்டு கத்தி போன்றவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தானசேகர் நேற்று கிருஷ்ணராஜபுரம் அருகே ரோந்து சென்றார். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இசக்கி பாலன் என்பவரை பிடிக்க முயன்றுள்ளார். அப்பொழுது அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார் . இதனை அடுத்து இசக்கி பாலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அண்ணா நகர் முதல் பாளைய ரோடு இணைப்பு வரை புதிதாக சாலை அமைக்கும் பணி தேர்தலுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.