India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள் கோவில்பட்டி தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதன் அருகே உள்ள பருவக்குடி, குருவிகுளம் ஆகிய பகுதிகளில் நாளை(மே.4) ஆதார திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சார்ந்த ஜோ வில்லவராயர் என்பவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் தனக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கான தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் தராத நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.5,81,458 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் அபராத தொகை விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதனை மீறி எவரேனும் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றால் அபராதம் விதிப்பதுடன் காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மதுரை சங்கிமங்கலத்தைச் சேர்ந்த 13 பேர் விளாத்திகுளம் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். கீழஈரால் பகுதியில் சென்ற போது சுற்றுலா வேனின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 காயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்த 13 பேரும் எட்டயாபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி அய்யாசாமி காலனியைச் சேர்ந்தவர் அசரியா மனைவி எஸ்தர் (52). இவர் கடந்த 26 ஆம் தேதி கோயமுத்தூரில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயமுத்தூர் சென்றுவிட்டு நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது அவரது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 36 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
பனிமய மாதா பேராலயம் கத்தோலிக்க திருச்சபை, 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். இது கிறித்துவர்களின் யாத்திரைத் தலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 6 பசிலிக்கா ஆலயங்களில் இதுவும் ஒன்று. அன்னை மேரி சிலைக்கு தங்க காரில் ஊர்வலம் எடுத்து பத்துநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. 2017 இல் இதில் ஒரு சில இடங்கள் புதுப்பிக்கப்பட்டது.
தேசிய விடுமுறை தினமான மே.1 இல் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்படி நேற்று தொழிலாளர் துறை அமலாக்க உதவி ஆணையர் மின்னல் கொடி தலைமையிலான அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில் 73 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அப்துல் என்பவர் நேற்று மாலை அடைக்கலாபுரம் வழியாக திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கிய போது கார் முழுவதும் தீயில் எரிந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அய்யாசாமி காலனியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டி எஸ்தர் . (52 )இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பி உள்ளார். அப்போது இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 37 பவுன் தங்க நகை திருடு போனது தெரிய வந்தது. எஸ்தர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி பகுதியில் உள்ள பழமையான கோவிலான வீரபாண்டீஸ்வரர், லட்சுமி நரசிம்மர் கோயிலை இந்து அறநிலையத்துறை சார்பில் புனரமைத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை இன்று ஆய்வு செய்தனர். இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.