Tuticorin

News December 5, 2024

பெண் காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

image

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோவில் உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் தலைமை காவலர் மகேஸ்வரியை(42) தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News December 4, 2024

ஜேசிபி வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊத்துப்பட்டி விளக்கில் இன்று (டிச.4) முன்னாள் சென்ற ஜேசிபி வாகனம் மீது திருப்பதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்து. இதில் ஜேசிபி டிரைவர், உதவியாளர் உட்பட பேருந்தில் வந்த பயணிகள் என 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News December 4, 2024

தூத்துக்குடியில் நிர்வாண போராட்டம் அறிவிப்பு!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உளவு பிரிவு காவலர்கள் பல்வேறு ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில், வரும் 24ஆம் தேதி தூத்துக்குடி மையவாடி அருகே நிர்வாண போராட்டம் நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 4, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச3) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News December 4, 2024

நாளை (4) எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்து நிலுவையில் உள்ள மனுக்கள் சம்பந்தமாக புகார் மனு அளிக்கலாம் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

மண் சரிவில் ஏழு பேர் பலி: கனிமொழி இரங்கல்

image

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது; உயிரிழந்தவர்களில் 5 பேர் சிறுவர்கள் என்பது பெரும் சோகம்; அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

பட்டப் பகலில் வாலிபர் வெட்டிக்கொலை

image

புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டம் புளியை சேர்ந்தவர் வெள்ளை கண்ணு வாலிபர், இன்று காலை இவர் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் இவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2024

தூத்துக்குடி: ஓய்வூதியர்கள் டிசம்பர் 9-க்குள் மனு அளிக்கலாம்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருக்கும்போது இறந்தவர்கள் ஆகியோரது ஓய்வூதியம், ஓய்வு கால பலன்கள் பெறுவதில் கால தாமதம் போன்றவை குறித்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.,27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான குறைகளை டிச.,9-க்குள் ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களாக அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்

News December 3, 2024

23 டன் கொட்டைப்பாக்கு பறிமுதல்; 4 பேர் கைது

image

தூத்துக்குடி துறைமுகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் இருந்து முந்திரிப் பருப்பு என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த கண்டெய்னர் பட்டியை மத்திய வருவாய் துறையினர் சந்தேகத்தின் பேரில் நேற்று சோதனை செய்தனர். அப்போது அதில் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டிருந்த 23 டன் கொட்டை பாக்கு இருந்தது. இது தொடர்பாக ஏற்றுமதி நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News December 3, 2024

தூத்துக்குடி அருகே கிடைத்த 1800 ஆண்டுக்கு முந்தைய மண்பாண்டம்

image

தூத்துக்குடி, கொங்கராயகுறிச்சியில் எழுத்தாளர் காமராசு, விக்னேஷ் ஆகியோர் நேற்று(டிச.,2) மரம் வைக்க மண் தோண்டும்போது வெளியே தெரிந்த மண்பாண்டத்தினை அடையாளம் கண்டு M.S.யுனிவர்சிட்டி தொல்லியல் துறை தலைவர் சுதாகர், உதவி பேராசிரியர் முருகன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ஆய்வு செய்து, 1800 ஆண்டு பழமையானது எனக்கூறி மண்பாண்டத்தினை பல்கலை., அருங்காட்சியத்தில் வைப்பதற்காக எடுத்துச் சென்றனர்.

error: Content is protected !!