Tuticorin

News May 6, 2024

94.14% தேர்ச்சி பெற்ற அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

image

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் மாணவிகள் 94.14% தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்தாண்டை விட 2% கூடுதலாகும். தேர்வெழுதிய 460 மாணவிகளில் 433 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் நான்கு மாணவிகள் தலா ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற குருநந்தினியை தலைமையாசிரியர் உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

News May 6, 2024

ஸ்ரீவைகுண்டத்தில் மாரிசெல்வராஜ் பட சூட்டிங்

image

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் பூஜையானது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்று தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை நடிகர் விக்ரம் தொடங்கி வைத்தார். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News May 6, 2024

தூத்துக்குடியில் ஆட்சியர் ஆய்வு

image

தூத்துக்குடி மாநகராட்சி புல் தோட்டம் பகுதியில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் இன்று ஆட்சியர் லட்சுமிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு தேக்கி வைக்கப்படும் குடிநீரில் குளோரின் கலப்பது போன்றவைகளை அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார். முறையாக குடிநீர் விநியோகம் செய்யவும் உத்தரவிட்டார்.

News May 6, 2024

திருச்செந்தூர் அரசு பள்ளி 100 % தேர்ச்சி

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் முதல் மதிப்பெண்ணாக 537 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

News May 6, 2024

தூத்துக்குடியில் 94.13% பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி 94.13% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 89.45% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.85 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

கடல் அலை சீற்றம் நீடிக்கும்

image

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்றுதூத்துக்குடி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

News May 6, 2024

சூசையப்பர் ஆலயத்தில் நற்கருணை பவனி

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புனித சூசையப்பர் கோவில் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் தினந்தோறும் சூசையப்பர் ஆலயத்திற்கு தரிசனத்திற்காக நூற்றுக்கணக்கான இறை மக்கள் சூசையப்பர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று நற்கருணை பவனி விழா நடைபெற்றது.

News May 5, 2024

தூத்துக்குடி: பல மணி நேரம் காத்திருந்த மக்கள்

image

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் கோவில்பட்டி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று  கோடை விடுமுறை என்பதால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் அரசு பேருந்து மிகக் குறைவாகவே இயக்கப்பட்டதால் பேருந்துக்கு பல மணி நேரம்  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

News May 5, 2024

தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

image

தூத்துக்குடி அண்ணாநகரை  சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. மனு மீதான விசாரணையின் உண்மைத்தன்மை தெரியாமல் அதுகுறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பதிவிட வேண்டாம் என  தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். 

News May 5, 2024

திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை

image

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பக்தர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காலை முதலே கடலில் குளிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.