Tuticorin

News December 11, 2024

தூத்துக்குடி மாவட்டம் இன்றைய (11) நிகழ்வுகள்

image

தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டையாபுர மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை காலை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது

News December 11, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (10.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு விளாத்திகுளம் கோவில்பட்டி திருச்செந்தூர் சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அழைக்கப்படலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

News December 10, 2024

எட்டையாபுரத்தில் மகாகவிக்கு நாளை மரியாதை

image

“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்” என சுதந்திர தீயை மக்கள் மனதில் பூட்டிய மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்தநாள் நாளை (11) கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அவரது சொந்த ஊரான எட்டையாபுரத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் இருக்கும் அவரது சிலைக்கு நாளை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

News December 10, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை குறைத்தீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்களிடம் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாக குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (டிச.11) கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

சாத்தான்குளம் அருகே புறா முட்டை சேகரிக்க சென்ற பலி

image

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (30) என்பவர் இன்று மாலை அங்குள்ள கிணற்றில் புறா முட்டைகளை சேகரிக்க இறங்கிய போது தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இவரை காப்பாற்ற சென்ற அவரது தந்தை பாண்டி மற்றும் தம்பி தினேஷ் ஆகியோரும் உள்ளே இறங்கியுள்ளனர். இதில் செல்வகுமார் உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிர் தப்பினர்.

News December 10, 2024

எஸ் எம் கிருஷ்ணா மறைவுக்கு கனிமொழி இரங்கல்

image

கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா மறைவை யொட்டி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்; அவர் ஒரு தொலைநோக்கு தலைவர்; அவர் கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்ப நிலப்பரப்பை மாற்றினார்; பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு ஆக்கினார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

News December 10, 2024

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்

image

தூத்துக்குடி, தெற்குகல்மேட்டில் இருந்து கடற்கரை செல்லும் சாலையில் தருவைகுளம் போலீசார் வாகன சோதனை செய்தனர. அப்போது அவ்வழியே வந்த லோடு வேனை நிறுத்தி சோதனையிட்ட போது தூத்துக்குடி கடல்வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1200 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார், வேன் ஓட்டுநர் காளிராஜன் மற்றும் அஜித் பெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News December 10, 2024

சூரியகாந்தியில் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை

image

விளாத்திகுளம், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் சூரியகாந்தி பயிர் செய்கின்றனர். சூரிய காந்தியில் மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் பயிர் எண்ணிக்கை குறைவதை தவிர்க்க 1 கிலோ விதைக்கு கார்பென்டாசியம், 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைப்பு செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி விதை பொருள் பரிசோதனை நிலைய அலுவலர் சேக் நூக் தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

கோவில்பட்டி: காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கருப்பசாமி என்ற சிறுவன் நேற்று(டிசம்பர் 9) அவரது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் கருப்பசாமி மூச்சு பேச்சு இல்லாமல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

அதிமுக இரட்டை வேடம் – கனிமொழி எம்பி

image

கனிமொழி எம்பி நேற்று தனது முகநூல் பக்கத்தில், “டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது அதை எப்போதும் அனுமதிக்க மாட்டேன் என முதல்வர் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் மக்களோடு நிற்பது போல் நாடகமாடும் அதிமுக, நாடாளுமன்றத்தில் “சுரங்கங்கள் கனிமங்கள் திருத்த மசோதா 2023” -க்கு ஆதரவளித்துவிட்டு இப்போது இரட்டை வேடம் போடுவதாக” தெரிவித்துள்ளார்

error: Content is protected !!